துப்பாக்கி:
உலகமே ஆவலோடு எதிர்பார்த்துகிட்டு இருக்க படம் இளைய தளபதி நடிக்கும் துப்பாக்கி படத்தைதான்! துப்பாகியோட கதை என்ன? வழக்கமா விஜய் படத்துக்குக் கேக்க கூடாத கேள்விதான் இது! இருந்தாலும் படத்த ப்ரமோட் பண்ண டிவில ஷோ பண்ணும்போது எவனாவாது கிருத்துருவம் புடுச்ச பய மொதக்கேள்வியே இதான் கேப்பான்! அங்க சொல்றதுக்காவது ஏதாவது ஒன்னத் தேத்தி வைக்கணும்! அதுக்குதான் இந்த ஸ்டோரி டிஸ்கசன்! ஒட்டுக் கேக்காதிங்கன்னு சொன்னாலும் கேக்கவா போறீங்க? ஒரு ஓரமா நின்னு கதைய ஒட்டுக் கேட்டுட்டுப் போங்க!
அஞ்சு பாட்டு நாலு சண்டைல ஒரு மணி நேரத்த ஓட்டிரலாம்! எப்பிடியும் ஒரு தங்கச்சி இருக்கும்! அந்தபுள்ளகூட செண்டிமெண்டா பேசுற சீன் நாலு வச்சு ஒரு அரை மணி நேரத்த ஓட்டிரலாம்! எப்பிடியோ பஸ்லயோ ட்ரைன்லையோ போய் பயபுள்ள தீவிரவாதிங்கள கொல்லத்தான் போகுது, அப்பிடி போகும்போது ஏதாவது ஒன்னு லவ் பண்ணாதா என்ன? ஹீரோயின் மேட்டர் ஓவர்! இந்த வில்லனுக்கு என்ன பண்ணலாம்? இந்த முறை வித்தியாசமா வில்லன வெளிநாட்ல வச்சிரலாம்! பின்ன எத்தன படத்துலதான் பஸ்ல ட்ரைன்ல போயே ரவுடிங்கள கொல்றது? இந்தவாட்டி ப்ளைட்ல போகட்டும்!
ஓப்பனிங் சீன்.. கிரேன் ஷாட்லகாமிக்கிறோம்! அமெரிக்க மக்கள் எல்லோரும் அங்கயும் இங்கயும் சிதறி ஓடிகிட்டு இருக்காங்க! நயாகரா நீர்வீழ்ச்சில(இந்த இடத்துல யாரும் நயன்தாரா நீர்வீழ்ச்சின்னு தப்பா படிக்காதிங்க!) இருந்து பயங்கர வெள்ளம் ஊருக்குள்ள வருது! ஒருபக்கம் தண்ணி ஃபோர்சா வர்ரத காமிக்கிறோம்.. அந்தப்பக்கம் கட் பண்ணி மக்கள் சிதறி ஓடரத காமிக்கிறோம்!
ஒரு கட்டத்துல மக்கள் ஒண்ணுமே செய்ய முடியாம ஒரு இடத்துல கூடி... கடவுளே எங்கள காப்பாத்த யாருமே இல்லையான்னு கத்துறாங்க! அப்பத்தான் மேல ஒரு ஏர்இந்தியா ப்ளைட் பறக்குறத காமிக்கிறோம்! அப்பிடியே ஜூம் பண்ணி ஜன்னல் வழியா கேமராவ கொண்டு போறோம்! அதுல ஜன்னல் ஓரமா விஜய் தூங்கிகிட்டு இருக்காரு! மக்களோட குரல் அவரோட காதுக்குள்ள போற மாதிரி பண்றோம்! இதை சி.ஜி.ல பார்த்துக்கலாம்!
மக்களோட குரல் உள்ள போனதும் விஜய் டபக்குன்னு முழிக்கிறாரு! எட்டிப்பார்த்தா ஒரே வெள்ளம்! விஜய் உடனே யோசிக்காம எந்திரிச்சு பைலட் ரூமுக்கு ஓடறாரு! இவரு அங்க போவாருன்னு தெரிஞ்சி பைலட் ரூம் திறந்தே இருக்கனும் அது ரொம்ப முக்கியம்! விஜய் வேகமா அங்க போய் பைலட்கிட்ட ஒரு கட்டிங் பிளேர் கடன் வாங்கி ப்ளைட் அடில கட் பண்ணி அப்பிடியே குதிக்கிறாரு!(இங்க கட்டிங் பிளேர் வச்சு கட் பண்ணும்போது பேக் ரவுண்ட் ஸ்கோர் ரொம்ப முக்கியம்! நாலு பேர விட்டு...துப்பு..துப்பு..துப்பாக்கி..துப்பு..துப்பு..துப்பாக்கின்னு கத்த விடனும்! ) இதை அப்பிடியே ஸ்லோ மோசன்ல காமிக்கிறோம்! ப்ளைட்ல எல்லோரும் அதிர்ச்சியாகி எட்டிப்பார்க்குறாங்க! அதுல அமெரிக்காவுக்கு படிக்க வர்ற காஜல் அகர்வாலும் பார்க்குறாங்க! அதுலே அவங்களுக்கு லவ் வர்றத ஃபேஸ் ரியாக்சன்ல காமிக்கிறோம்!
அந்தபக்கம் மக்கள் உயிர் பயத்துல பிராத்தனை பண்ணிகிட்டே இருக்காங்க! திடீர்னு பார்த்தா வெள்ளம் வர்றது நின்னு போகுது! மக்கள் எல்லோரும் அப்பிடியே அதிர்ச்சியாகி சந்தோசத்துல கடவுளுக்கு நன்றி சொல்றாங்க! என்ன நடந்ததுன்னு பார்க்க அப்பிடியே அருவிக்கரை ஓரமா போறாங்க... அங்க பார்த்தா... பார்த்த மக்கள் எல்லோரும் அப்பிடியே கீழ விழுந்து கும்புட்றாங்க! ஏன்னா விஜய் நயாகரா நீர்வீழ்ச்சி குறுக்கால படுத்துகிட்டு வெள்ளத்த தடுத்து வச்சிருக்காரு! இதை அப்பிடியே ரெண்டு கிரேன் வச்சு, ஒரு ஹெலிகாப்டர்ல கேமரா வச்சு ஜூம் பண்ணிப் பண்ணி காமிக்கிறோம்! எப்பிடி? உலகத்துல எவனுமே யோசிச்சே பார்க்காத ஒரு ஓப்பனிங் சீன்? அப்பிடியே எந்திரிச்சு வந்து ஒரு ஓப்பனிங் சாங்!
சாங் முடிஞ்சதும் சம்ப்ரதாயமா சண்டை வரணும்! அதுக்குதான் என்ன பண்றோம், சாங் முடிஞ்சதுமே ஹெலிகாப்டர்ல வில்லன் வந்து இறங்குறாரு! ஏன்னா நயாகரா தண்ணில அவரு மினரல் வாட்டர் பேக்டரி வச்சிருக்காரு! அத தடுத்து நிறுத்தவும் கோவம் வந்து விஜய்ய கொல்றதுக்காக வர்றாரு! இறங்கி வந்த வில்லன் ஒவ்வொருத்தனையா புடிச்சு இங்க யார்ரா துப்பாக்கி? இங்க யார்ர துப்பாக்கின்னு கேட்டுகிட்டே வர்றாரு! அதுவரைக்கும் விஜய் அவரப் பார்க்காம திரும்பிநின்னு ஒத்தக்காலால இன்னொரு காலச் சொறிஞ்சிகிட்டே நிக்கிறாரு! கரெக்ட்டா விஜய்ய புடிச்சு திருப்புறாரு வில்லன்! வில்லன பார்த்த விஜய் அதிர்ச்சியாகி நிக்கிறாரு! இங்கதான் வைக்கிறோம் ட்விஸ்ட்! பிளாஸ்பேக்....!
கிராமத்துல ஆத்து தண்ணிய மறிச்சு மினரல் வாட்டர் பேக்டரி கட்டி ஊரையே ஏமாத்துற வில்லன் அமெரிக்காவுல இருக்கான்னு தெரிஞ்சு, அவனைக் கொல்றதுக்கு ஊர்ல எல்லோரும் காசு வசூல் பண்ணி விஜய்ய அமெரிக்கா அனுப்புறாங்க! வரும்போது தங்கசிகிட்ட போயி "கண்டிப்பா நீ வயசுக்கு வர்றதுக்குள்ள திரும்பி வந்துருவேன், நீ வயசுக்கு வந்ததும் இந்த ஆத்து தண்ணிலதான் உனக்கு சடங்கு செய்வேன் இந்த அண்ணன், இது சத்தியம்!" அப்பிடின்னு சொல்லும்போது பேக்ரவுண்ட்ல பேரரசு வாய்ஸ்ல ஒரு சோக பிட் சாங் போடறோம்!
அப்பிடியே அழுதுட்டு இந்தப்பக்கம் திரும்புனா முறைப்பெண் அமலாபால்! " நீங்க தகிரியமா போங்க மாமா, ஊர சுத்தி வேட்டையாடுன அய்யனாரு இப்ப உலகத்தச் சுத்தி வேட்டையாட போகுது!(ங்கொய்யால..ப்ரடியூசர் காசுதானே?) நீங்க வர்ற வரைக்கும் நான் காத்துகிட்டு இருப்பேன்! என்ன.. உங்க அப்பாவ மட்டும் என் பக்கத்துல வரக்கூடாதுன்னு சொல்லிருங்க! அப்பறம் நான் உத்தரவாதம் இல்லை" னு சொல்லுது! " நீ கவலைப்படாத புள்ள.. நான் போயிட்டு ரெண்டு சண்ட போட்டு சீக்கிரம் அவனக் கொன்னுட்டு வந்தர்றேன், இடைல யாரோடயாது ரெண்டே ரெண்டு சாங் மட்டும் பாடிக்கிறேன் கண்டுக்காதன்னு சொல்லிகிட்டே எல்லோருக்கும் டாட்டாக் காட்டி கிளம்புராறு!
ப்ளைட்ல ஏறுன பிறகுதான் ஞாபகம் வருது வில்லனோட அட்ரஸ் எழுதின அவனோட போட்டோவ மறந்துட்டு வந்தது! ஐயோன்னு நினைக்கும்போதே ப்ளைட் அவரு ஊர கிராஸ் பண்ணுது! அப்ப எட்டி ஜன்னல் வழியா பார்க்குறாரு!
கீழ வயல்ல தங்கச்சி அண்ணேன்னு...கத்திகிட்டே ஓடி வருது! அதோட கைல அந்த போட்டோ! அப்பிடியே அந்த போட்டோவ தூக்கி வீசுது! அது அப்பிடியே பறந்து... பறந்து... வர்ரத ஸ்லோ மோசன்ல காமிக்கிறோம்! அது அப்பிடியே பறந்து வந்து விஜய் இருக்க ஜன்னலுக்கு நேர வந்து ஒட்டிக்குது! அத பார்த்த விஜய் அத எடுக்க முடியாம யோசிக்கிறாரு, உடனே மொபைல் போன எடுத்து அந்த வில்லன போட்டோ எடுத்துக்கிராறு!
கட் பண்ணி கிராமத்துக்கு கொண்டு போறோம்! போட்டோவ தூக்கி போட்டுட்டு நிக்கிற தங்கச்சிகிட்ட அப்பா ஓடியாந்து " எப்பிடிம்மா அந்த ப்ளைட்லதான் உன் அண்ணன் போறான்னு கண்டுபிடிச்சன்னு கேக்குறாரு! " என் அண்ணனோட வாசம் எனக்கு தெரியாதாப்பானு" சொல்லிகிட்டே கண்ணு கலங்குது தங்கச்சி! இங்க ஒரு சோக பிட் பேரரசு வாய்ஸ்ல போடறோம்!
இப்ப கட் பண்ணி அமெரிக்கா! இந்த ரெண்டு பாரா பிளாஸ்பேக்க விஜய் நினைச்சுப் பார்த்து முடிக்கிற வரைக்கும் வில்லன் அவரு சட்டைய புடிச்ச படியே நிக்கிறாரு! யார கொல்லணும்னு இங்க வந்தாரோ அவருதான் அந்த வில்லன்! வில்லன மட்டும் விட்டுட்டு அடியாள பூராம் அடிச்சி போடறாரு விஜய்! ஏன்னா வில்லன்கிட்ட சவால் விடனும்ல?
சொன்னமாதிரியே சவாலும் விடறாரு! உன் செல்வாக்கு சாம்ராஜ்யம் எல்லாத்தையும் அழிச்சி நடு தெருவுல நிக்க வச்சு கொல்றேன்னு! சொல்லிட்டு அப்பிடியே ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு டீ குடிக்க போறாரு! அங்க பார்த்தா காஜல் அகர்வால் வந்துருக்காங்க! விஜய்ய அவங்க ரூமுக்கு கூட்டி போறாங்க! அப்பவே ஒரு ட்ரீம் சாங் காஜல் பாடறாங்க! பாட்டு முடிஞ்சதுமே காஜல் அவங்க காதல விஜய்கிட்ட சொல்றாங்க! விஜய் கொஞ்சம் யோசிச்சிட்டு.. " நான் இப்பவே என் முறை பொண்ணத்தான் கட்டிக்கிவேன்னு சொன்னா ஒரு குத்து சாங் போட முடியாது! வெயிட் பண்ணு சாங் முடிஞ்சதும் சொல்றேன்னு சொல்லிட்டு தூங்க போறாரு!
நைட்டு திடீர்னு சத்தம் கேட்டு முழிச்சா.. வில்லனோட ஆட்கள் கதவ உடச்சிகிட்டு இருக்காங்க! இதைபார்த்த காஜல் ஓடிப்போய் விஜய்ய கட்டிக்கிறாங்க! இந்த இடத்துல குத்து பாட்டு பாடுவாம்னு யோசிக்கிற விஜய் வில்லன்கள பார்த்து மனசு மாறி பின்பக்கமா காஜல இழுத்துகிட்டு ஓடறாரு! ஓடும்போதே காஜல ஒரு இடத்துல ஒளிஞ்சிக்க சொல்லிட்டு விஜய் மட்டும் ஓடறாரு! வில்லனோட ஆட்கள் துரத்துறாங்க! இதை மாத்தி மாத்தி காமிக்கிறோம்! விஜய் திடீர்னு ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ள ஓடி டாய்லெட்ல உள்ள போய் ஒளியிராறு!
அவர துரத்தி வந்த வில்லனோட ஆட்கள் எல்லா இடத்துலயும் தேடி கடைசியா டாய்லெட் உள்ள வர்றாங்க! அங்க பார்த்தா ஏகப்பட்ட டோர்ஸ் இருக்கு! கதவ திறக்கவும் முடியாம போகவும் முடியாம சுத்தி சுத்தி வர்றப்ப.. ஒருத்தன் மட்டும் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சான்! எல்லோரும் அங்க போய் ஏன்டா சிரிச்சன்னு கேக்குறாங்க, அதுக்கு அவன் ஒரு டாய்லெட் டோர பார்த்து கை காமிக்கிறான்! அங்க பார்த்தா " இந்த டாய்லெட்டில் ஒளிந்து கொண்டிருப்பது உங்கள் விஜய்" அப்பிடின்னு ஒரு சிலேடு! பழக்க தோசத்துல எஸ்.எ.சி. போட்டு போயிட்டாரு!
ஒருவழியா விஜய்ய அடிச்சி வில்லன்கிட்ட கூட்டிட்டு போறாங்க! உள்ள போகும்போதே வில்லன் சைடுல ரெண்டு வெள்ளைக்கார ஜிகுடிய வச்சிக்கிட்டு முமைத்கானோட ஐட்டம் சாங்க பார்த்துகிட்டு இருக்காரு! விஜய்யும் வலியோட ஆடறாரு! பாட்டு முடிஞ்சதும் வில்லன் விஜய்ய பார்த்து "பார்த்தியா எப்பிடி தூக்கிட்டு வந்தேன்னு?" ன்னு சொல்றான்! உடனே விஜய் இடுப்புல கை வச்சிக்கிட்டு சத்தமா சிரிக்கிறாரு! வில்லன் புரியாம பார்க்கும்போது
"என்னது? தூக்கிட்டு வந்தியா? போட்டோவுக்கு பின்பக்கம் அட்ரஸ் இருந்ததால அத பார்க்கமுடியல.. அதான் உன் வழில உன் அட்ரச கண்டுபிடிச்சு வந்தேன்னு சொல்லி அடிக்க ஆரம்பிக்கிறாரு! எல்லோரையும் அடிச்சி முடிச்சு ஃபேக்டரிய தீ வச்சு கொளுத்தி வில்லன கொல்லும் போது கட் பண்ணி கிராமத்த காமிக்கிறோம்! அங்க தங்கச்சி வயசுக்கு வந்துருது! கட் பண்ணி திரும்ப அமெரிக்கா! காஜல் போலிசோட வர்றாங்க! போலிஸ் விஜய்க்கு தேங்க்ஸ் சொல்லி FBI ல சேர சொல்றாங்க! ஆனா தாய் நாட்டுக்குத்தான் என் சேவைன்னு சொல்லிட்டு வர்றாரு.அத அப்பிடியே ஃபரீஸ் பண்ணி காட்றோம்!
வெளில வந்து காஜல்கிட்ட நீயும் என் கூட ஊருக்கு வா பிளைட்ல போகும்போது ஒரு குத்துப்பாட்டு போட்டுட்டு ஊர்ல வந்து நீயே நேர்ல பாருன்னு சொல்லி கூட்டி வர்றாரு! சொன்னமாதிரியே ஒரு குத்துப்பாட்டு முடிச்சிட்டு ட்ரைன்ல வந்து ஊர்ல இறங்குறாங்க! ஊரே கூடி நின்னு வரவேற்பு கொடுக்குது! இங்கயும் பேக்டரி மூடுனதால தண்ணி ஊருக்குள்ள வருது! அதுலே தங்கச்சிக்கு சடங்கு பண்ணும்போது எல்லோரும் சந்தோசமா இருக்காங்க! அமலாபால் ஓடியாந்து மாமான்னு கட்டிக்குது! அதைப்பார்த்த காஜல் அப்பிடியே ஓரமா போய் கண்ணீரத் துடைச்சிகிட்டு சிரிச்சிகிட்டே வந்து வாழ்த்துறாங்க! படத்தையும் முடிக்கிறோம்!
என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி
கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்
சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர்
நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்
பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்
செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ரகு மேனன்,
நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ராமச்சந்திரன்,
ஜவுளிச் துறை செயலாளர் ரீட்டா மேனன்,
கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர் கங்காதரன்,
குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர்,
சட்டத்துறை செயலாளர் விசுவநாதன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மாதவன் நாயர்
நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள
ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது