புதன், 26 செப்டம்பர், 2012

உணவே மருந்து: இஞ்சி, பூண்டு, நெல்லிக்காய், மாதுளம், ஆப்பிள், கத்தரிக்காய், முருங்கைக்காய், மாங்காய், அவரைக்காய், பாகற்காய், வாழைக்காய், வெள்ளரிக்காய், பப்பாளிக்காய்.....



கத்தரிக்காய்
என்ன இருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.
யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.
முருங்கைக்காய்
என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி.
யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.
பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.
மாங்காய்
என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ
யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.
பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.
அவரைக்காய்
என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.
யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.
பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.
அத்திக்காய்
என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.
பீர்க்கங்காய்
என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்
யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.
பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
கோவைக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ.
யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு.
பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.
புடலங்காய்
என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பாகற்காய்
என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.
யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு.
யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.
பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.
சுரைக்காய்
என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.
இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.
யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்.
யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.
பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.
பூசணிக்காய்
என்ன இருக்கு: புரதம், கொழுப்பு
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.
யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.
கொத்தவரைக்காய்
என்ன இருக்கு : நார்ச்சத்து
யாருக்கு நல்லது : நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.
பலன்கள்: ருசி மட்டுமே
வாழைக்காய்
என்ன இருக்கு: கொழுப்புச் சத்து, விட்டமின் இ.
யாருக்கு நல்லது: வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்.
யாருக்கு வேண்டாம்: வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.
வெள்ளரிக்காய்
என்ன இருக்கு: விட்டமின் ஏ, பொட்டாசியம்
யாருக்கு நல்லது: சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள்: உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.
சுண்டைக்காய்
என்ன இருக்கு: விட்டமின் சி
யாருக்கு நல்லது : சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்.
பலன்கள்: கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.
பலாக்காய்
என்ன இருக்கு : சுண்ணாம்புச்சத்து
யாருக்கு வேண்டாம் : வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு.
பலன்கள் : செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும்.
பப்பாளிக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம்.
யாருக்கு நல்லது : மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க
விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.
யாருக்கு வேண்டாம் : கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
பலன்கள் :சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
 பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
 பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
 பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
 நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
 பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
 பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
 பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
 பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
 பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
 பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
 பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
 பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
களாக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, சி.
யாருக்கு நல்லது : மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த
மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : தொண்டைவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து, பித்தத்தை கட்டுப்படுத்தும்.
நெல்லிக்காய்
என்ன இருக்கு : விட்டமின் சி, செல்லுலோஸ், கார்போ ஹைட்ரேட், கால்சியம்,
பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் நிகோடினிக் ஆசிட்
யாருக்கு நல்லது : பிளட் பிரஷர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
எல்லோருக்கும் உகந்த அமிர்தக்கனி.
பலன்கள் : இளமையை நீடிக்கச் செய்யும். தலைமுடி, தோல், கண் பார்வையை
பாதுகாக்கும். இதயம் நுரையீரலை வலுவூட்டும். காரட்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள்.
யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வைக்கு உகந்தது. உடல் பருமனாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.
பீன்ஸ்
என்ன இருக்கு : புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள்.
யாருக்கு நல்லது : ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
யாருக்கு வேண்டாம் : குடைச்சல், ஏப்பம், வயிற்று வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு ஏற்படும்.
பலன்கள் : பித்தம் தணியும், பார்வை தெளிவு, சருமப் பளபளப்புக்கு உதவும். வாயு நீக்கும்.
நூல்கோல்
என்ன இருக்கு : சுண்ணாம்புச் சத்து
யாருக்கு நல்லது : ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோயாளிகளுக்கு.
யாருக்கு வேண்டாம் : உப்புச் சத்து அதிகம் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும்.
முள்ளங்கி (வெள்ளை)
என்ன இருக்கு : நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து.
யாருக்கு நல்லது : சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.
யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள் : அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும்.
முள்ளங்கி (சிவப்பு)
என்ன இருக்கு : கந்தகம், கால்சியம், விட்டமின் சி.
யாருக்கு நல்லது : ஹைபர் அசிடிட்டி உள்ளவர்களுக்கு.
பலன்கள்: கை, கால், மூட்டு வீக்கத்தைக் குறைக்கும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கும். மித உஷ்ணம் தரும். சிறுநீரை வெளியேற்றும்.
காலிஃபிளவர்
என்ன இருக்கு : பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ, இ.
யாருக்கு நல்லது : புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
பலன்கள் : மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.
முட்டைக்கோஸ்
என்ன இருக்கு : சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ.
யாருக்கு நல்லது : சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.
யாருக்கு வேண்டாம் : பனிக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.
நார்த்தங்காய்
என்ன இருக்கு : சிட்ரஸ் ஆசிட்
யாருக்கு நல்லது : அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : வயிற்றுப்புண் அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : வாயுத் தொல்லையை விலக்கி நெஞ்சுக் கரிப்பை நீக்கும். அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தும்
ஆல்ரவுண்டர் திராட்சை:
திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது பயன்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலுள்ள ‘குளுக்கோஸ்’ விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது. இரத்த உற்பத்தியையும் செய்கிறது. மேலும், மலச்சிக்கல்,ஆஸ்துமா,ஒற்றைத்தலைவலி என பல்முக குண ஊக்கியாய் பணிபுரிகிறது.
மருத்துவமனையாகும் எலுமிச்சை: எவரெஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய வீரர்கள் இந்தச் சாற்றைப் பருகியே சாதித்ததாக கூறினர். இதன் முக்கிய சேர்க்கை ‘சிட்ரிக் அமிலமும்’, ‘வைட்டமின் சி’ யும் தான். இரத்த வாந்தியை இது நிறுத்தும். நுரையீரல், குடல், தொண்டை, ஜலதோஷம், காலரா, உடல் பருமன், நல்ல பசி என அனைத்துத் துறைகளிலும் இது பணியாற்றி சிறந்த மருந்தகமாய் திகழ்கிறது.
அத்தி தரும் ஆரோக்கியம்: இந்தப் பழம் இறைமறை குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஹோமரின் காவியம் பேசுகிறது. பைபிளிலும் இதன் வாசம் வீசுகிறது. இதில் விட்டமின் ‘சி’ இரும்புச் சத்து, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து இதிலுண்டு. தேயும் எலும்புக்கு வேண்டிய கால்சியம் இதில் உள்ளது. பத்தே நாளில் வீரியம் தரும் சுவரொட்டிகளுக்கு மத்தியில், இப்பழம் உண்மையிலேயே ஆண்மையைத் தட்டியெழுப்புகிறது. மூலநோய்க்கும், மூளைச் சோர்வுக்கும் இது அருமருந்து. முதுமையிலும் வேகமாக நடந்த காந்திஜி இளமையில் சாப்பிட்டது இதைத்தான்.
ஆரஞ்சும் இன்னொரு தாய்ப்பாலே: தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்கள் தங்களின் பிரதிநிதியாக குழந்தைகளுக்கு இந்தச் சாறைத் தரலாம். இப்பழம், இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது. ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்ட ஆயுள் உறுதியாகும்.
வயிற்றைப் பேனும் மாதுளை: பாபிலோனியாவின் தொங்கும் தோட்டத்தில் மாதுளை இருந்திருக்கிறது. இது மஞ்சள் காமாலையைப் போக்கி, கல்லீரல், இதயம், சிறுநீரகம் இவைகளையும் பாதுகாக்கிறது. பித்த வாந்தி உள்ளோர் இதைத் தேனுடன் சாப்பிட உடனடி நிவாரணம் உண்டு. மலத்துடன் ரத்தம் வெளியேறுவதை இது தடுக்கிறது. அறிவுத்திறனை அதிகரிக்கும் பழமாகவும் இது முதலிடம் பெறுகிறது.
ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை.
ஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான விருந்துகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் உணவாகப் பயன்படுகிறது. மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் பழம் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஆப்பிள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது.
ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன. ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.
தேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக இரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.
ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு இன்ஷா அல்லாஹ் குணமாகும். வலிப்பு நோய் உள்ளவர்கள ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப் பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் இன்ஷா அல்லாஹ் குறைந்துவிடும்.
மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிடும் பலக்கத்தைக் கொண்டுள்ளதால் தேவையான சக்தியைப் பெறுகிறார்கள். இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் மட்டும் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.
தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதிகாலையில் இதன் சாற்றைப் பிழிந்து கொடுத்துவந்தால் தூக்கத்தில் எழுந்து நடக்கும் ஆபத்தான நிலையில் இருந்து, ஆச்சரியப்படும்படியான நிவாரணத்தைப் இன்ஷா அல்லாஹ் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும். சரியான உடல் வளர்ச்சியும், சதைப் பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடைவார்கள்.
குடற் கிருமிகள் வெளியேற ஆப்பிள் பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் குடற் கிருமிகள் இன்ஷா அல்லாஹ் அழிந்துவிடும்.
திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.
உடம்பில் சிலருக்கு கெட்டவாடை வரும்; வியர்வை நாற்றம் அடிக்கும். இப்படி உள்ளவர்கள் விலை உயர்ந்த வாசனையுள்ள செண்ட்டுகளையும், பவுடர்களையும் பயன்படுத்துவார்கள். இவர்களின் இரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடைகள் இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும். உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.
ஆப்பிள் பழச்சாற்றைத் தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இந்தப் பாகை எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்து, வயதுக்கு ஏற்ற அளவில் செயல்படும். இதய நோயாளிகளும், மூளையின் போஷாக்கு தேவைப்படுபவர்களும் இம்முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல பலனைக் கொடுக்கும். குதிகால் வாதம் உள்ளவர்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் குதிகால் வாதம் இன்ஷா அல்லாஹ் படிப்படியாகக் குறைந்து குணமாகும்.
சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து இன்ஷா அல்லாஹ் பூரண குணம் ஏற்படும். தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது. பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.
ஆப்பிள் ஜூஸ் :
ஆப்பிள் பழம் ஒன்றைத் துண்டித்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட் 500 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டுவந்தால் இயற்கையான தாதுபலத்தைத் தரும். இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.
ஆப்பிள் மரப்பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இப்பூக்களை வாங்கி சுத்தம் செய்து, இதற்குச் சமமாய்ச் சர்க்கரைச் சேர்த்து நன்கு கலவை செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்து துணியால் வேடுகட்டி ஒரு மண்டலம் வெய்யிலில் வைத்து எடுத்துக் கொண்டு தினசரி 10 கிராம் அளவில் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் கோளாறுகள் நீங்கி ஆண் தன்மை அதிகரிக்கும். இதயம் பலப்படும். மூளைக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள்
உள்ளன.
இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும்
பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை
அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம் முத்துக்களில் சிறிதளவு …. மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்தரோகமும் இனஷா அல்லாஹ் தீரும்.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.
மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி இனஷா அல்லாஹ் நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.
பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.
பொதுவாக மாதுளம்பழச்சாற்றுக்கு நான்கில் ஒரு பாகம் சீனி கலந்து சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும்
சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும்
உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் இனஷா அல்லாஹ் தீரும்.
மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.
மலராத மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து பொடித்துக் கொண்டு இதில் சிறிதளவு ஏலம், கசகசாவையும் பொடித்துக் கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் இனஷா அல்லாஹ் குணமாகும். உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு இனஷா அல்லாஹ் நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை இனஷா அல்லாஹ் நீங்கும். அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் இனஷா அல்லாஹ் நிவர்த்தியாகும்.
மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து விடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் இனஷா அல்லாஹ் தீரும்.
மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.
புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2_5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் இனஷா அல்லாஹ் குணமாகும்.
துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் ‘பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது.
இஞ்சி
என்ன இருக்கு : கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ.
யாருக்கு நல்லது : எல்லோருக்கும். அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிக நல்லது.
யாருக்கு வேண்டாம் : வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் ஏற்படும் போது இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் தேனில் கலந்து குறிப்பிட்ட அளவிற்கு சாப்பிட்டு வந்தால் வாந்தி, மயக்கம் இன்ஷா அல்லாஹ் போயே போய்விடும். இஞ்சி மட்டுமல்ல. அது காய்ந்து சுக்காக மாறினாலும் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகச் செயலாற்றுகிறது. பித்தத்தை தணிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். ஆயுளை நீடிக்கச் செய்யும். கொழுப்பைக் கரைக்கும். பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் ஏதுமின்றி இஞ்சி மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.
பூண்டு
பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
பலன்கள் : பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும்.
ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62.0 விழுக்காடும், புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நாச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லிகிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.
யாருக்கு நல்லது : பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். பால்+பூண்டு+தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.
காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.
பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள்
சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.
பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.
நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.
நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இன்ஷா அல்லாஹ் இல்லற வாழ்வு இனிதாகும்.
இனி… வெங்காயத்தை எந்தெந்த முறையில் பயன்படுத்தினால் என்னென்ன பயன்களை நாம் பெறலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.
1) நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.
2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து காதில் விட, காது வலி குறையும்.
3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.
4) வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5) வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
6) வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.
7) வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.
8.) வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.
9) வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு குறையும்.
10) வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும்.
11) வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
12) வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
13) படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.
14) திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.
15) வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.
16) வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.
17) பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.
18) வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட, மேகநோய் குறையும்.
19) வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20) பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21) வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக