பான்(PAN) என்பதன் விரிவாக்கம் "பெர்மனெண்ட் அக்கௌன்ட் நம்பர்" (நிரந்தர கணக்கு எண்). இது ஒரு 10 இலக்கு வரிவடிவ எண் குறியீடு. இதனை ஒரு பிளாஸ்டிக் தகடு வடிவத்தில் இந்திய வருமான வரி துறை வழங்குகிறது. ஒவ்வொரு
பான் கார்டு வழங்கும் முக்கிய காரணம்? உலகளாவிய அடையாளத்தை ஏற்படுத்தவே. இதனை வைத்து வரி, பணப் பரிமாற்றங்கள், கடன்கள், முதலீடுகள், நிலம் வாங்குதல் மற்றும் விற்றல் மற்றும் வரி கட்டுபவரின் இதர செயல்பாடுகளின் பல ஆவணங்கள் மற்றும் தகவல்களை ஒரு மையத்தில் இணைத்து கண்காணிக்கலாம். பான் கார்டு என்பது வரி கட்டும் காரணத்திற்காக மட்டுமே பயன்படுகிறது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அதற்கும் பான் கார்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பான் கார்டின் நகல் பல வணிக பரிமாற்றங்களுக்கு அடையாளத்தை நிரூபிக்க பயன்படுகிறது. உதாரணத்திற்கு புது வங்கி கணக்கு திறக்க, ஒரு சொத்தை அல்லது வண்டியை வாங்கவோ விற்கவோ, வீட்டிற்கு தொலைபேசி இணைப்பு பெற, டீமாட் மற்றும் மியூசுவல் பண்ட் போன்ற முதலீடுகள் செய்ய PAN கார்டின் நகல் தேவைப்படும்.
புதிய பான் கார்டிற்கு விண்ணப்பிக்க:
பான் கார்டு வேண்டும் என்றால் 18 வயது முடிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் அதற்குவிண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 2 பாஸ்போர்ட் போட்டோ சைஸ் மற்றும் அடையாள சான்றிதழ் மற்றும் விண்ணப்ப படிவத்தில் 3 கையெழுத்திட வேண்டும். புதிய பான் கார்டு விண்ணப்பிக்க கீழ்கண்ட பட்டியலில் இருந்து அடையாள சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும்:
- வங்கி அறிக்கை (3 Month Transaction) - ரேஷன் கார்டு
- ஓட்டுனர் உரிமம் - பாஸ்போர்ட்
நீங்கள் விண்ணப்பம் செய்யது 15 நாட்கள் கழித்து உங்கள் விலாசத்திற்கு கூரியரில் பான் கார்டு வந்து சேரும்.
நீங்கள் இந்திய அரசாங்கத்திடம் வரி கட்டினாலோ அல்லது பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தாலோ உங்களிடம் கண்டிப்பாக பான்(PAN) கார்டு இருக்க வேண்டும். உங்கள் பான் கார்டின் முக்கியத்துவத்தை, அந்த கார்டு மற்றும் பான் எண்ணின் தேவைகளை இப்போது புரிந்திருப்பீர்கள். உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் சிறிது நேரம் செலவழித்து இன்றே விண்ணப்பம் செய்யவும்.