வியாழன், 27 செப்டம்பர், 2012

ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது.... கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், கொட்டாவி, ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம், எளியதான ஒரே வழி தூக்கம்,




1 ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப் பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.

2வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற வண்டிகளை எண்ணிக்கொண்டிருக்கலாம்.

3 உங்கள் வைரி யாரேனும் இருந்தால் அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.

4 நெட் கனெக்ஷ்ன் இருந்தால் சீரியல், சினிமா கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கும் நேரம் மிச்சம்.

5 கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி...அதுதான் உண்மையிலேயே நேரத்தைக் கொல்வது.

6 பல்லிடுக்குகளை நாக்கினால் துழாவி ஏதேனும் உணவுத்துணுக்கு மாட்டுகிறதா என்று பார்க்கலாம், மாட்டினால் அதை மென்று கொண்டு இருக்கலாம்.

7 கார்ட்டூன் போட்டுப் பழகலாம். முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப் பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல் பார்த்துக்கொள்வது அதி முக்கியம்.

8 கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம்,ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது போல.கனவில் நமீதா, ரம்பா வகையறாக்களை வரவழைத்தல் நலம்.

9 கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவி, ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம்.

10 காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான் கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம். இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம். ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.

11 பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய கைவினைப் பொருட்களை செய்து பழகலாம். யார் அதிக தூரம் விடுவது என கொலீக்குடன் போட்டி வைக்கலாம். ஆனால், வேலை பார்க்கும் யார் மேலாவது மோத விட்டு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

12 இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம். இஷ்ட தெய்வம் இல்லையா? பிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத முயற்சித்தால் நிறைய எழுத முடியும்.

13 ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்ட கோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம். செல்போன் கேமரா இருந்தால் படம் பிடித்தும் வைக்கலாம்.

14 எல்லாவற்றையும் விட எளியதான ஒரே வழி தூக்கம்.

15 தொந்தியை வருடிக்கொடுப்பது போன்ற சிறு சிறு தேகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

16 கேஃபடேரியாவில் / கேன்டீனில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர் செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம்.

17 வேறு யாராவது எழுதிய ஈ.மெயிலில் தப்பு கண்டுபிடிக்கலாம். முடிந்தால் அவரிடமே சொல்லி வெறுப்பேற்றலாம்.

18 யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம். லிஃப்டை தவிர்த்து படிகளில் நடந்து போனால் நேரமும் அதிகமாகும், அரட்டையும் அதிகமாகும்.

19 வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர் கேம்ஸை கொண்டு வந்து டவுன்லோடு செய்து வைக்கலாம். போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும்.

20 தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம்.சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை வரவழைத்தால் ஒரு முழுநாளையும்ஓட்டலாம்.

21 ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன் செய்து பிடித்த பாடல் கேட்கலாம். அதை உங்கள் சுபீரியருக்கு டெடிகேட்டும் செய்யலாம்.

22 உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்காவது போன் செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம் உசாவலாம். முன்னதாக போன் உரையாடல் ரெக்கார்ட் ஆகிறதா என்பதை மட்டும் செக் செய்து கொள்வது உசிதம்.

எல்லாம் சில காலமே



நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்னதோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=========================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
=========================
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாதுஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
=========================
நல்ல முடிவுகள்அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்
=========================
சிக்கல்கள் என்பவைஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப்போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும்இதுதான் வாழ்க்கை!
=========================
விட்டுக் கொடுங்கள்விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்அன்பு பெருகும்.
=========================
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசுசொல்வதை மட்டும்கேளுங்கள்.

ஏன்னா அறிவு......

சரி விடுஇல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.
=========================
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
அன்னை தெரஸா.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!
=========================
எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி
=========================
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.

கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
=========================
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
=========================
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம்இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
=========================
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. - பாரதியார்
=========================
எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
இன்றும் நாளையும் என்றும்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு


இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!
இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் .
அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்கள
ால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ?
அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ?

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு .
சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் . உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார் . இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார் .

முதல் கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார் . வந்து துடிப்பான இளைஞ்சர்களை சந்தித்து . வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் . என்று இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார் . பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின் ஆதரவை திரட்டினார் . ஆனால் அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும் ஆயுதம் எடுத்து போராட முன் வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த போது .

தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான இளைஞர்கள்
சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள் . அந்த இளைஞர்களுக் கெல்லாம் மறைமுகமாக பயிற்சி அளிக்கப்பட்டது . தமிழகத்தில் காந்தியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே போனது . தமிழர்கள் சுபாஷ்சந்திரபோசின் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய ஆரம்பித்தார்கள் .

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள் என்று வெள்ளையர்களுக்கு தெரியவர . இவர்களை எல்லாம் வெள்ளையர்கள் வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள் .

சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டதை அறிந்த காந்தியின் ஆதரவாளர்கள் . சுபாஷ் சந்திரபோசை காட்டி கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அதனால் அவரால் இந்தியாவில் இருந்துகொண்டு செயல்பட முடியாமல் போனது . வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாடுக்கு சென்றார் .

சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின் ஆதரவை திரட்டினார் . ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான ஆயுத தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார் . எல்லாம் தாயாரான பின்பு இந்தியாவில் இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ முகாம்களின் எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல் அறிந்து கொண்ட பின்னர் .

தமிழ் நாட்டில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பினார் . நான் வெளிநாட்டில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன் . இந்த ராணுவத்தில் இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள் . என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்று தகவல் அனுப்பி இருந்தார். இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவியது . இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள் .

அங்கே எல்லோருக்கும் போர்ப் பயற்சி அளிக்கப்பட்டது . அப்போது போராளிகளிடம் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் . எமது தேசத்தில் வெறும் இருபது ஆயிரம் வெள்ளையனின் ராணுவம் இருக்கிறது . நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம் . அவர்களை நாம் கப்பல் மூலம் சென்று டெல்லி வரை தாக்க போகிறோம் டெல்லியில் தான் வெள்ளையனின் முழு பலமும் இருக்கிறது எனவே டெல்லி வரை நாம் சென்று தாக்க போகிறோம் என்று சொன்னார் . ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது .

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது . சுபாஷ்சந்திரபோஸ் திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள் மூலம் சென்று டெல்லி வரை வெள்ளையர்களின் ராணுவத்தை அடித்தார்கள் . அப்போது வெள்ளையர்கள் பாரிய உயிரிழப்புக்களை சந்தித்தார்கள் . வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஆயுத உதவிகளை தடுத்தார்கள் முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ் சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது . அதனால் தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம் செய்யஇயலாமல் ஆயுத பற்றாகுறை வந்தது. பொருளாதார பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் இருப்பது பற்றி கேள்விகுறியானது .

சுபாஷ்சந்திரபோஸ் ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும் சண்டையில் வெள்ளையர்கள் தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள். இந்த தோல்வியை அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. அதனால் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள் .
ஆனால் இந்தியா முழுவதும் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் ராணுவ போராட்டம் தெரியவந்தது .

அதனால் காந்தி வழியில் போராடி கொண்டிருந்தவர்களுள் பெரும்பாலானோர் சந்திரபோஸ் அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால் வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டது . ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ் சந்திர போஸ் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என்றும் கூறி வந்தார் .

காந்தியின் ஆதரவாளர்களால் சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க பட்டார் . அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் வெள்ளையர்கள் . ஆனால் சிறையில் வேலை செய்தவர்களின் உதவியுடன் சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து வந்தார் . அதன் பிறகு
ஆயுத போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வந்தது
வெள்ளையர்கள் வெளியேறும் நிலைமையும் வந்தது .


ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடித்து இந்தியாவில் விரட்டியடிக்க பட்டோம் என்று வந்து விடக் கூடாது என்பதற்காக . அப்படி ஒரு அவமானம் வந்து விட கூடாது என்பதற்காக காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள் .

வெள்ளையர்கள் அகிம்சைரீதியாக போராடும் காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள் அகிம்சை போராட்டத்தால் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம் நாங்கள் இந்தியாவை விட்டு போக போகிறோம் என்று சொன்னார்கள் . காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறினான் .

ஆனால் தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள் . அவரின் மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம் காந்தியின் அகிம்சை போராட்டம் பாதித்து விடும் இந்த வரலாறு மறைந்து விடும் என்பதற்காக .

இந்தியர்களே தமிழர்களே நன்றி மறப்பது நன்றன்று.. எனவே இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த சுபாஷ்சந்திரபோஸ் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கம் இந்நாளில் அந்த வீரனை நினைவு கொள்வோம்.

காய் மற்றும் பழங்களின் விதைகளில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன... பூசணிக்காய் விதை, தக்காளி விதைகள், பப்பாளி விதைகள்...


காய்கறி மற்றும் பழங்களின் விதையை தூக்கிப்போட வேண்டாம்..
வீட்டில் சமைப்பதற்கு பயன்படுத்தும் காய்கறிகளின் விதைகளை எப்போதும், தூக்கிப் போடுவோம். ஏனெனில் அவற்றில் எந்த ஒரு ஆரோக்கியமும் இல்லை என்பதற்காகத் தான். தெரிந்தோ, தெரியாமலோ, இதுவரை நாம் தூக்கிப் போட்டுவிட்டோம். ஆனால் இனிமேல் அவற்றின் விதைகளைத் தூக்கிப் போட வேண்டாம். ஏனெனில் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களின் விதைகள் உடலுக்கு மிக
வும் ஆரோக்கியமானவை. அத்தகைய காய்கறி மற்றும் பழங்களின் விதைகளால், நமது உடலில் ஏற்படும் பல நோய் களைத் தடுக்கலாம். எனவே இனிமேல் காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடும் போது, அதன் விதைகளையும் கண்டிப்பாக சாப்பிடுங்கள். இப்போது எந்த காய் மற்றும் பழங்களின் விதைகளில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்..

பூசணிக்காய் விதை
டயட் மேற்கொள்வோருக்கு பூசணிக்காயின் விதைகள் மிகவும் சிறந்தது. ஏனெனில் அவற்றில் குறைந்த அளவு கலோரியும், கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், அதில் எலும்புகளுக்கு வலுவூட்டுகின்ற, சிறுநீரகக் கற்களை கரைக்கக்கூடிய சத்துக்களான இரும்பு மற்றும ஜிங்க் இருக்கின்றன. மேலும் குடலில் ஏதேனும் ஒட்டுண்ணிகள் இருந்தால், பூசணிக்காயின் விதைகளை சாப்பிட்டால் சரியாகிவிடும். வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் இருந்தால், அவற்றை பூசணிக்காயின் விதைகள் சரிசெய்துவிடும்.

தக்காளி விதைகள்
சருமத்தை அழகாக்க பயன்படும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இத்தகைய தக்காளியின் உள்ளே இருக்கும் விதைகளை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல் இந்த தக்காளியின் விதையில் உள்ள ஆன்டி-க்ளாட்டிங் என்னும் பொருள், இதயத்தில் எந்த அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். இப்போது சொல்வதை நம்புவீர்களோ, இல்லையோ, தக்காளியின் விதைகளை சாப்பிட்டால், விரைவில் செரிமானம் ஆகாது. ஆனால் மலச்சிக்கலை சரிசெய்யும். மேலும் செரிமானம் நடைபெற்று வெளியேறும் செரிமானப் பாதையை சுத்தம் செய்யும்.

குடைமிளகாய் விதைகள்
தற்போது பல வகையான குடைமிளகாய் வந்துள்ளது. ஆனால் அதில் பெல் பெப்பர் என்னும் கடை மிளகாயில் தான் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் இதனை சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையானதாக இருக்கும். ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் குடைமிளகாயை சமைக்கும் போது, அதிலுள்ள விதையை தூக்கிப் போட்டுவிட்டு, அதன் சதையை மட்டும் தான் சமைப்பார்கள். இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம். ஏனெனில் அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. அதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எளிதில் வயதான தோற்றத்தை தருவதையும் தடுக்கும். ஏனெனில் அந்த விதையில் வயதான தோற்றத்தை தடுக்கும் லைகோபைன் என்னும் பொருள் உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் இளமையோடு காட்சியளிக்கலாம்.

பப்பாளி விதைகள்
அனைவருக்கும் பப்பாளியின் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியும். ஆனால் அதன் விதைகளில் எத்தனை சத்துக்கள் உள்ளன என்பது தெரியாது. எப்படி பப்பாளியின் சதையில் நிறைய சத்துக்கள் உள்ளதோ, அதேப் போல் அதன் விதைகளிலும் உள்ளது. பப்பாளியின் விதைகளை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் இருக்கும் டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறுவதோடு, செரிமானத்தை அதிகரிக்கிறது. அதிலும் வாயுத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு ஸ்பூன் பாப்பாளியின் விதையை சாப்பிட்டால் சரியாகிவிடும். வேண்டுமென்றால் அதனை காய வைத்து, உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். உடல் நலத்திற்கு மட்டும் இது நல்லதல்ல, அழகிற்கும் தான் நல்லது. வேண்டுமென்றால் அதனை ஃபேஸ் பேக்கிற்கு பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக மின்னும்.

மாதுளை விதைகள்
இனிமையான சுவையைக் கொண்ட மாதுளை பழம் முழுவதுமே விதைகளால் மட்டும் தான் நிரம்பியுள்ளது. இதனை யாரும் தூக்கிப் போடமாட்டார்கள். ஆனால் அதன் சிறப்பான பலனை பற்றி சிலருக்கு தெரியாது. சிலர் அதன் ஜூஸை மட்டும் சாப்பிட்டுவிட்டு, விதையை துப்பிவிடுவார்கள். ஆனால் அதன் விதையை டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டால், உடல் எடை ஈஸியாக குறையும். அதனை ஒரு ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். மாதுளையில் இருக்கும் பைட்டோகெமிக்கலில், கேன்சர், டியூமர், இதய நோய் போன்றவற்றை தடுக்கும் பாலிஃபீனால் இருக்கிறது. ஆகவே இந்த பழத்தை சாப்பிட்டு, உடலை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகின்னர் உணவியலாளர்கள்..

மக்களை மிகவும் கவர்ந்த ரஜினியின் பஞ்ச் டயலாக்ஸ்!!! நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, சிங்கம் எப்பவுமே சிங்கிளா தான் வரும்...



திரையுலகில் "சூப்பர் ஸ்டார்" என்றாலே அனைவரது நினைவிற்கும் வருபவர் "ரஜினிகாந்த்" தான். அவர்கள் தென்னிந்தியாவில் மட்டும் புகழ் பெற்று விளங்கவில்லை. உலகம் முழுவதும் அனைவரது மனதிலும் நீங்கா இடத்தைப் பெற்று, அனைவரது வீட்டிலும் ஒருவராக வாழ்ந்து வருகிறார். இத்தகைய புகழ் பெற்ற ரஜினிகாந்த், தன் ஸ்டைலால் மட்டும் அனைவரையும் கவரவில்லை, பஞ்ச் டயலாக்குகள் மூலமும், ஒவ்
வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடியதை, தன் படங்களின் வழியாக உண்மையாக வெளிகாட்டி வருகிறார். இவரது பெயரைக் கேட்டாலே அனைவரின் மனதிலும் ஒரு குதூகலம் பிறக்கும். இத்தகைய சூப்பர் ஸ்டார் ரஜினியின், சிறந்த, இன்றும் அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கும், மறக்க முடியாத பஞ்ச் டயலாக்குகள் சிலவற்றை படித்து பாருங்களேன்...


* ரஜினியின் சூப்பர் ஹிட் படமான "பாட்ஷா" படத்தில் நிறைய டயலாக்குகள், மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதில் "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற டயலாக், இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளது.

* அதிலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவந்த சிவாஜி படத்தில் வரும் டயலாக்குகளான "பேரை கேட்டாலே, சும்மா அதிருதுல்ல...", "பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் எப்பவுமே சிங்கிளா தான் வரும்" போன்றவை சிறந்த பஞ்ச் டயலாக்காக உள்ளது.

* ரஜினி அவர்கள் சிவாஜியுடன் நடித்த கடைசி படமான "படையப்பா"-வில் கூட வாழ்க்கையின் உண்மையை வெளிப்படுத்தும் டயலாக்கை சொல்லியுள்ளார். அதுதான் "அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல".
அதுமட்டுமல்லாமல், இன்னும் சில சூப்பர் மற்றும் சிந்திக்க வைக்கும் உண்மை டயலாக்குகளான...

* "எப்பவும் பொன், பெண், புகழ் பின்னாடி ஆம்பளை போகக் கூடாது. ஆம்பளைங்க பின்னாடி தான் இதெல்லாம் வரணும்."

* "நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்."

* "நம்ம வாழ்க்கை நம்ம கையில தான் இருக்கு."

* "நல்லவங்களை ஆண்டவன் நிறைய சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களை சோதிக்க மாட்டான், ஆனா கைவிட்டுருவான்."

* "கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது."

* "வாழ்க்கையில பயம் இருக்கலாம். ஆனால் பயமே வாழ்க்கையாகிடக் கூடாது."

* "கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்குறது எதுவும் நிலைக்காது."

இவை மட்டுமல்ல இன்னும் இருக்கின்றன. மேலும் ரஜினி அவர்களின் பஞ்ச் டயலாக்குகளுக்கு அளவே இல்லை. அந்த அளவு அவர் தன் ஸ்டைலோடு, மக்களையும் சிந்திக்க வைத்துள்ளார்.

தாவரத் தங்கம் - கேரட்

ஒரு குறிப்பிட்ட காய்கறி வகையை `தாவரத் தங்கம்’ என்று அழைக்கிறார்கள். அது எது தெரியுமா? `கேரட்’தான். 

நம் மேனிக்கு தங்கம் போன்ற பளபளப்பைத் தருவதால்தான் கேரட்டுக்கு இப்பெயர். கேரட்டில் உள்ள `பீட்டா கரோட்டின்’, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் சிறப்புத் தன்மையையும் கொண்டிருக்கிறது. மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம், இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கூறுகள், புற்றுநோய்க்கு எதிரியாகவும் செயல்படுகின்றன.
இந்த பீட்டா கரோட்டினானது, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

நீண்டகாலமாக `அல்சர்’ உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட்டை நன்கு பிழிந்து சாறு எடுத்து வாரம் மூன்று தடவை வீதம் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் குணமடையும். மறுபடியும் அது போன்ற பாதிப்புகள் ஏற்படாமலும் தடுத்துவிடும்.

சிலருக்கு வாயில் எப்போதும் துர்நாற்றம் இருந்துகொண்டே இருக்கும். எத்தனை தடவை பல் துலக்கினாலும், வாய் கொப்புளித்தாலும் அந்தத் துர்நாற்றம் போகாது. அதற்குக் காரணம் வாயோ, பற்களோ அல்ல. வயிற்றில் இருக்கும் கோளாறுதான். வயிற்றுக் குறைபாட்டைச் சரிசெய்தால் வாய் துர்நாற்றம் அகன்றுவிடும். அதற்கு, வாரம் ஐந்து நாட்கள் மட்டும் கேரட் சாறை சர்க்கரை, உப்பு சேர்க்காமல் அருந்திவர வேண்டும். அப்புறம், வாய் துர்நாற்றம் போயே போய்விடும்.

வாரத்துக்கு இரண்டு நாட்களாவது கேரட்டை சமையலில் பயன்படுத்துவது உடம்புக்கு நல்லது. காரணம், கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை அளிப்பதுடன், செரிமானத்தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது.

கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம் என்பது இதன் சிறப்பு. பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி கேரட்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் அந்தக் கறை மறைந்துவிடும்

பிரிட்ஜ் பராமரிப்பு... பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது...


பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் !!!


நம் வீட்டில் கண்டிப்பாக அனைவரும் குளிர்சாதன பெட்டி வைத்திருப்போம், அதனை பராமரிப்பது பற்றி சிறு தகவல்கள். முடிந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

சமையல் எரிவாயு சிக்கனம். இதனோடு ஒப்பிட்டால் மின் அடுப்புக்கு நீங்கள் செய்யும் செலவு மிகக் குறைவுதான்.


சமைய ல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன் படுத்துவது எப்படி..?

இனி ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் மானிய விலையில் கிடைக்கும் என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது கண்டு அதிர் ந்து போயிருக்கிறார்கள் குடும்பத் தலைவிகள். ஆறு கேஸ் சிலிண்டரு க்கு மேல் தேவைப்படுமெனில், ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய் தந்து தான் வாங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வருட த்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் எப்படி போதும்; குற
ைந்தது பத்து கேஸ் சிலிண்டராவது வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுக்க எழுந் துள்ளது. சிலிண்டர்களின் எண்ணிக் கையை எட்டாக உயர்த்தலாமா அல் லது ஆறு சிலிண்டர் என்கிற அறிவிப் பையே வாபஸ் வாங்கி விடலாமா என மத்திய அரசு யோசித் து வருவது ஒரு பக்கமிருக்க, சமையல் எரிவாயு வை சிக்கனமாகப் பயன் படுத்துவது எப்படி..? மாறிவிட்ட கலாசார சூழலில் இனி, விறகு அடுப்புக்கு மாறு வது சாத்தியமே இல்லை என்கிறபோது, சமையல் எரிவாயுக்கு வே று என்னதான் மாற்று என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

மின்சார அடுப்பு!

மின்சார அடுப்பை பயன்படுத்துவது கேஸ் சிலிண்டருக்கு ஒரு சிறந் த மாற்று. ஒரு கேஸ் சிலிண்டர் குறைந்தது 45 நாள் வருகிறது என வைத்துக்கொள்வோம். ஒருகேஸ் சிலிண்டர் ரூ.386.50 விலை எனி ல், சராசரியாக ஒரு நாளைக்கு ரூ. 8.50 செலவாகும். அதே ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய்க்கு வாங்கி னால் ஒரு நாளைக்கு ரூ.16.28 செலவாகும்.

மின் அடுப்பின் மூலம் ஒரு நாளை க்கு ஒரு குடும்பத்திற்குத் தேவை யான சாதம், சாம்பார், பொரியல், டீ, பால் காய்ச்சுவது, இட்லி அல் லது தோசை என மூன்று வேளையும் செய்ய ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு மணி நேரம் ஆகும். ஒரு மணி நேரத்திற்கு மின் அடுப் பில் 1,000 வாட் பவரில் வைத்து தொடர்ந்து ஒரு மணி நேரம் சமை த்தால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதாவது, ஒரு நாளைக்கு 2 யூனிட் மின்சாரம் செலவாகும்.

உங்களின் வீட்டில் அதிக பட்ச மாக 500 யூனிட்டுக்குள் மின்சா ரம் பயன்படுத்தினால், நீங்கள் ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். அதாவது, மின் அடுப்பிற்காக ஒரு மாதத்திற்கு ரூ.180 உங்களுக்குச் செலவாகும். ஒரு வருடத்திற் கு அதிகபட்சமாக ரூ.2,160 செலவாகும். ஆனால், மானியம் மற்றும் மானியமில்லாத விலையில் ஆண்டு க்கு 10 கேஸ் சிலிண்டர் வாங்கினால் 5,251 ரூபாய் செலவாகும். இதனோடு ஒப்பிட்டால் மின் அடுப்புக்கு நீங்கள் செய்யும் செலவு மிகக் குறைவுதான்.

ஆனால், நீங்கள் சொந்த வீட்டில் இரு ந்தால் மட்டுமே இந்த கணக்கு சரிவரும். நீங்கள் வாடகை வீட்டில் இருந்து, ஒரு யூனிட்டுக்கு 6 முதல் 8ரூபாய் தரும்பட்சத்தில், அதற்கா கும் செலவை நீங்கள் கேஸ் வாங்கி பயன்படுத்திவிடலாம்.

எலெக்ட்ரிக் குக்கர்!

சாதம், பிரியாணி, பொங்கல் செய்ய மட்டுமே எலெக்ட்ரிக் குக்கர் பயன் படுத்தப்படுகிறது. இதில், சாதம் வேக குறைந்தபட்சம் 30 முதல் 45 நிமிடங் கள் ஆகின்றன. மின் அடுப்புக்குச் செலவாகும் அதே அளவு மின்சாரம் தான் இதற்கும் தேவைப்படும். ஆவி யில் வேக வை க்கும் பொருட்களை இதில் வேக வைத்து எடுத்துக் கொள் ளலாம்.

மைக்ரோவேவ் ஓவன்!

மைக்ரோவேவ் ஓவன் – இன்று கணிசமான குடும்பங்களில் இதைத் தான் பயன்படுத்துகிறார்கள். இதில் டீ, காபி போட்டுக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட் களை சூடுபடுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான நேரம் என் பது மிக மிக குறைவாக இருக்கும். ஆனால், இதற்கென இருக்கும் பிரத் யேகமான பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

மாற்று வழிகளைப் பற்றி யோசிப்பது ஒருபக்கமிருக்க, சமையல் எரிவாயு வை சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளை பார்ப்போம். காரணம், சில எளிமையான நடைமுறை களை பயன்படுத்தினாலே அரசு தரும் ஆறு சிலிண்டர்களை வைத் து, ஆண்டு முழுவதையும் ஓட்டி விடலாம் என்கிறார்கள் ஆயில் நிறுவன அதிகாரிகள்.

அவர்கள் தரும் டிப்ஸ்கள் இதோ உங்களுக்கு:

சமையலுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொண்டு அடுப்பை ஆன் செய்வது அவசி யம்.

அடிக்கடி ஆஃப், ஆன் செய்வதால் அதிக கே ஸ் செலவாகும். எனவே, அதை தவிர்ப்பது நல்லது.

அகலமான பாத்திரத்தை வைத்து சமைத் தால் எரிபொருள் வீணாகாது.
தண்ணீரை கொதிக்க வைத்து சாதம் வடிக் காமல், குக்கரில் சமைப் பது ஒரு வழி. அதோடு ஒரே குக்கரில் காய்கறி, பருப்பு, அரிசி என தனிதனிப் பாத்திரத்தில் வைத்து சமைக்கலாம். கேஸ் அதிகமாக மிச்சமாகும்.

வெந்நீர் வைப்பதற்கு கேஸ் அடுப்பை பயன்படுத்தக்கூடாது. வெந்நீர் தயாரிக்க என எலெக்ட்ரிக் கொதிப்பான்கள் உள்ள ன. அதையே வாங்கி பயன்படுத்தலாம்.

டீ, காபி அடிக்கடி போடுவதற்குப் பதில் , மொத்தமாகப் போட்டு ஃபிளாஸ்கில் வைத்து குடிக்கலாம்.

ஃபிரிட்ஜில் வைத்திருந்த பால் மற்றும் பொருட்களை சிறிது நேரம் வெளியே வைத்து அறை வெப்ப நிலைக்கு வந்தபிறகு சூடுபடுத்த லாம்.