செவ்வாய், 25 செப்டம்பர், 2012

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

வெங்காயத்தின் 50 வகையான மருத்துவ குறிப்புகள்:-

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் போன்ற பொருள் காணப்படுகின்றது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் (பெல்லாரி வெங்காயம்) இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள
் தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கு

பழைய சோறு: நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய.


பழைய சாதத்தில் இவ்வளவு விஷயமா......?

பழைய சோறு- அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. (ஆனால் இன்று நட்சத்திர ஹோட்டல்களில் மெனு கார்டில் முதலிடம் பழைய சோறு காரணம் கீழே முழுவதும் படிங்க..)

பழைய சோறு- அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம்.
இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது.

பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். அப்படிதான் எங்கள் வீட்டில் ஒரு நாள் மதிய உணவை முடித்து விட்டு மீதம் இருந்த சாத்திற்க்கு தண்ணிர் உற்றி வைத்து விட்டோம் , சிறிது நேரத்தில்
ஒருவர் தனக்கு பசிகிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள் என கேட்க எங்க அம்மா அவரிடம் இப்போதான் தண்ணிர் ஊற்றினேன் குழம்பு ஊற்றி கொண்டு வரவா அல்லது தண்ணிரோடு சாப்பிடுகிறீர்களா என கேட்க தண்ணி ஊத்தியாச்சா நான் பழைய சோறு சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம் என கூற, இப்போதான் ஊற்றினேன் பழைய சோறு இல்ல என எடுத்து கூறியும் அவர் எனக்கு வேண்டாம் என நடையை கட்டிவிட்டார். அப்போதே அப்படி என்றால் இக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான்
வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும்.

காலையில் கழிவறயில் மல்லு கட்ட வேண்டாம்.
இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பண்றி காய்ச்சல் உட்பட. காலை உணவாக பழைய சாத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தன்னிர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும்.

அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல்
இல்லமல் காலையில் ஃபிரியா போலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப்
கூறுகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்குஅதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா?
(என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க
வேண்டியாத இருக்கு)

பொங்குன சோத்துல தண்னிய ஊத்திட்டு அடுத்த நாள்
கலைல திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதற்க்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாததில் தண்னிர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்டட்டியில் போட்டு தண்னிர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்றுஇருக்கும். மதியம் வரை பசிக்காதாம்.

சிறுநீரகத்தில் கற்களா? மாதவிடாய் கோளாறுகளா ? வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உயிருக்கே ஆபத்தான நோய்களை குணமாக்கும். மருத்துவப் பயன்மிக்க மூலிகைகளுள் வாழையும் ஒன்று.

சிறுநீரகத்தில் கற்களா? வாழைத்தண்டில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்..

விலை மலிவான ஒரு பொருள் உயிருக்கே ஆபத்தான நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது மருத்துவ உலகம் வியக்கும் உண்மை. வெட்டி எறியப்படும் வாழைத்தண்டு உடல் உபாதை யான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

வாழைத்தண்டு நார்ச்சத்துள்ள உணவுப்பொருளாகும். வாழைத்தண்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூல
ம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். நீர் சுருக்கு ஏற்படாமல் பாதுகாக்கும்.

சிறுநீரக பிரச்சினை
சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சி னைகளைத் தோற்றுவிக்கிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும், துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் சிறுநீரக தொடர்பான நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அதிக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம் போன்ற வற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல் சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடிக்கடி சிறுநீரை அடக்குதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.

வாழைத்தண்டானது உடலின் தேவையற்ற கழிவுகளை வெளியேற்று கிறது. சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகலாம். இதனால் சிறுநீரக கல் கரைந்து காணமல் போகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ள வர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகள்
தென்னிந்தியாவில் பல விதங்களில் வாழைத்தண்டு சமைக்கப்படுகிறது. வாழைத்தண்டை பச்சடியாகவும், சாறு எடுத்து ஜூஸ் போலவும் சூப் செய்தும் அருந்தலாம். உடல் எடையை குறைப்பதில் டயட் இருப்பவர் கள் அதிக அளவில் வாழைத்தண்டு சேர்த்துக்கொள்கின்றனர்.

வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மாதவிடாய் கோளாறுகள்
மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும்

உடல் எடை குறைய சில வழிகள். உடல் பருமனைக் குறைப்பதற்காக நாம் படா தபாடு படுகிறோம். உடல் எடை குறைய சில வழிகள்...



உடல் பருமன். இது பலருக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தருகிறது. உடல் பருமனைக் குறைப்பதற்காக நாம் படா தபாடு படுகிறோம். உடற்பயிற்சி, மருந்து, மாத்திரைகள் என்று இது தொடர்கதையாகவே உள்ளது. இங்கு சில எளஜுதான வழிமுறைகளைத் தருகிறோம். கடைப்பிடித்துப் பாருங்கள்

1. இலநதைமர இலையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடிக்க உடல் எடை குறையும்.

2. அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் இவைகளை பாலுடன் காய்ச்சி குடித்துவர உடல் எடை குறையும்.

3. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.

4. ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.

5. செம்பருத்தி பொடியை தேன் கலந்து தினமும் காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட கொழுப்பு குறையும்.

6. கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் உணவுக்குப் பின் சாப்பிட உடல் எடை குறையும்.

7. துளசி இலை சாறை சூடாக்கி சிறிது தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.

8.புடலங்காயை அடிக்கடி சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

9. கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

10. முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் தினமும் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.

11. அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கி தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

12. சிறிதளவு மோர் மற்றும் காரட் இவற்றை நன்றாக சேர்த்து அரைத்து தினமும் குடித்து வந்தால் உடல் இளைக்கும்.

13. ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

14. சிறிதளவு சோம்பு, கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் சுத்தமான சிறிதளவு தேன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் உடல் எடைக் குறையும்

15. சிறிதளவு இலந்தை இலைகளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து மைய அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் மெலியும்

16.சிறிதளவு கொள்ளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து அதை ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு(கல் உப்பு) கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் உடல் மெலியும் அதனுடன் உடல் பலமும் கிடைக்கும்.

அரோக்கியமான உணவு (பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்), பழம், காய்கறிகள் சாப்பிட்டால் நுரையீரல் புற்றுநோய் குறையும்


பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்

1.என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.

2.தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.

3.இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.

4.மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.

5.இதயத்தை பலப்படுத்தும் தாமரை.

6.தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.

7.இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).

8.மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.

9. நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.

10.மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.

11.வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.

12.உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.

13.மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.

14.குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.

15.ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.

16.கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.

17.மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.

18.நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.

19.வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.

20.நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.

21.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.

22.மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.

23.மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.

24.மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.

25.சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.

26.ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.

27.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.

28.ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.

29.ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.

30.முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)

31.மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.

32.முகம் அழகுபெற திராட்சை பழம்.

33.அஜீரணத்தை போக்கும் புதினா.

34.“பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.

35.பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.

36.மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”

37.சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

38.தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.

39.முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி

வாழ்க்கை குறிப்புகள்.... பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

முரளிகிருஷ்ணா வாழ்க்கை குறிப்புகள்:

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.     Hmmmm    
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.    Clap    

Shirdi Sai Movie Wallpapers












Shirdi Sai Movie Wallpapers