செவ்வாய், 25 செப்டம்பர், 2012

உடல் எடை குறைய சில வழிகள். உடல் பருமனைக் குறைப்பதற்காக நாம் படா தபாடு படுகிறோம். உடல் எடை குறைய சில வழிகள்...



உடல் பருமன். இது பலருக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தருகிறது. உடல் பருமனைக் குறைப்பதற்காக நாம் படா தபாடு படுகிறோம். உடற்பயிற்சி, மருந்து, மாத்திரைகள் என்று இது தொடர்கதையாகவே உள்ளது. இங்கு சில எளஜுதான வழிமுறைகளைத் தருகிறோம். கடைப்பிடித்துப் பாருங்கள்

1. இலநதைமர இலையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடிக்க உடல் எடை குறையும்.

2. அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் இவைகளை பாலுடன் காய்ச்சி குடித்துவர உடல் எடை குறையும்.

3. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.

4. ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.

5. செம்பருத்தி பொடியை தேன் கலந்து தினமும் காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட கொழுப்பு குறையும்.

6. கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் உணவுக்குப் பின் சாப்பிட உடல் எடை குறையும்.

7. துளசி இலை சாறை சூடாக்கி சிறிது தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.

8.புடலங்காயை அடிக்கடி சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

9. கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

10. முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் தினமும் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.

11. அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கி தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

12. சிறிதளவு மோர் மற்றும் காரட் இவற்றை நன்றாக சேர்த்து அரைத்து தினமும் குடித்து வந்தால் உடல் இளைக்கும்.

13. ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

14. சிறிதளவு சோம்பு, கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் சுத்தமான சிறிதளவு தேன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் உடல் எடைக் குறையும்

15. சிறிதளவு இலந்தை இலைகளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து மைய அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் மெலியும்

16.சிறிதளவு கொள்ளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து அதை ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு(கல் உப்பு) கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் உடல் மெலியும் அதனுடன் உடல் பலமும் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக