ஏசியை சரியாகப் பராமரிக்காவிட்டால் நீண்ட நாள் உழைக்காது. அதோடு, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு ருக்கிறது. முறையாகப் பராமரிக்காத ஏசி அதிகம் செலவு வைக்கும். எப்படிப் பராமரிப்பது என்பதை விளக்குகிறார் ஏசி மெக்கானிக் இஜாஸ் அகமது. மாதம் ஒருமுறையாவது ஏசியை சர்வீஸ் செய்யவேண்டும். அதிகமான புகை, புழுதி உள்ள இடங்களில் வசிப்பவர்கள் குறைந்தது மாதத்துக்கு 2 முறை சர்வீஸ் செய்யவேண்டும். அதிக தூசி ஏசியில் சேர்ந்தால் பாதிப்பு நமக்குத்தான். எனவே, ஏசியில் உள்ள ஃபில்டரை சுத்தப்படுத்த சர்வீஸ் செய்வது அவசியம். அதிகம் பயன்படுத்தாத காலகட்டத்தில்கூட சர்வீஸ் செய்து வைப்பது ஏசியின் வாழ்நாளைக் கூட்டும்.
ஏசி வாங்கும்போது இலவச ஸ்டெபிலைஸரையும் சேர்த்துக் கொடுப்பார்கள். அது ஒரிஜினல் பிராண்ட்தானா என்பதைப் பார்த்து வாங்கவும். சில கடைகளில் விலை மலிவான சீனத் தயாரிப்புகளைக் கொடுத்துவிடுவார்கள். அலுமினிய ஸ்டெபிலைஸர் ஏசியைப் பாழாக்கிவிடும். நல்ல தரமான ஸ்டெபிலைஸரில் தாமிரம் இருக்கும். அதுதான் நீடித்து உழைக்கும்.
ஏசி இணைப்பில் இருக்கும் ஒயர்கள் அடிக்கடி லூசாகிவிடும். அதனால்தான் தீ விபத்து, ஏசி வெடிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஏசியில் உள்ள ஒயர்கள் சரியாகப் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்பதை மெக்கானிக்கின் உதவியோடு அவ்வப்போது சோதனை செய்வது நல்லது.
குளிர் முகத்தில் படவேண்டும் என்பதற்காக உங்களுக்குப் பிடித்த இடத்தில் ஏசியை வைக்கக்கூடாது. குறைந்தது 6 அடிக்கு உயரமான இடத்தில்தான் ஏசி இருக்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து வெளியாகும் குளிர்ச்சி அறை முழுக்க நிரம்பும்.
நல்ல குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிக டிகிரியில் டெம்பரேச்சர் வைக்கக் கூடாது. 23 டிகிரிக்கு குறைவாகச் செல்லும்போது ஏசியில்
அதிக பிரஷர் ஏற்படும். அதனால் தீப்பிடிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே 23 - 24 டிகிரி என அளவான டெம்பரேச்சருக்கு பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.
ஏசி ஆனில் இருக்கும்போது பெர்ஃப்யூம், ரூம் ஸ்பிரே ஆகியவற்றை ஏசியின் மீது அடிக்கக்கூடாது. அப்படிச் செய்தால், ஏசியின் உள்ளே இயங்கும் காயில் பழுதாகிவிடும்.
ஏசி அறையில் சூரிய ஒளி படாதவாறு ஸ்கிரீன் போட்டுக்கொள்வது நல்லது. வெப்பம் அறைக்குள் நுழைந்தால் அவ்வளவு சீக்கிரம் குளிர்ச்சி அடையாது. இதனால் மின்சாரமும் வீணாகும்.
ஏசியை சரியாக துளையிட்டு பொருத்தாவிட்டால் அதிகம் சப்தம் எழுப்பும். பர்ச்சேஸ் செய்யும் கடையிலேயே பிராண்டுக்கு ஏற்றபடி ஏசி பொருத்திக்கொடுக்க நபர்கள் இருப்பார்கள். அவர்களையே அழைத்து ஏசியை பொருத்துவது நல்லது.
சர்வீஸ் செய்யும்போது காயில் க்ளீன் செய்யப்படுகிறதா? ஃபேன் மோட்டார்களுக்கு ஆயில், பெல்ட் அட்ஜஸ்ட்மெண்ட், கம்ப்ரஸர் க்ளீனிங் எல்லாம் செய்கிறார்களா என்பதை அருகிலிருந்து சோதனை செய்து கொள்ளுங்கள்.
ஏசி பொருத்தப்பட்ட அறையில் அளவுக்கு அதிக பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி இருந்தால், அறை குளிர்ச்சியாவதற்கான நேரம் அதிகமாகும்.
அதன் காரணமாக மின்சாரம் அதிகம் செலவாகும்.
ஏர் கூலர் எப்படி?
அதிக விலை கொடுத்து ஏசி வாங்க முடியாதவர்கள், சுவரில் ஏசி பொருத்தும் வசதி இல்லாதவர்களுக்கு ஏர்கூலர் சரியான சாய்ஸ். ஆனால், ஏர்கூலர்
கடல் காற்று வீசும் அல்லது அதிக ஈரப்பதம் நிலவும் பிரதேசங்களில் சரிவர பயன் அளிக்காது. சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஏர்கூலரால் பலனில்லை. ஏர்கூலர் குளிர்ந்த காற்றை மட்டுமே தரும். ஏசியில் கிடைக்கும் குளிர்ச்சி ஏர் கூலரில் கிடைக்காது.
ரூ15 லிட்டர், 25 லிட்டர், 45 லிட்டர் என அறையின் தன்மைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். உஷா, கென்ஸ்டார், சிம்பொனி என பல பிராண்டுகள் கிடைக்கின்றன. விலை ரூ. 4 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ரூபாய்க்குள்.
குளிர் முகத்தில் படவேண்டும் என்பதற்காக உங்களுக்குப் பிடித்த இடத்தில் ஏசியை வைக்கக்கூடாது
என்ன பிராண்ட்? என்ன விலை? (ரூபாயில்)
முக்கால் டன்
ஒனிடா 17,990
கோத்ரெஜ் 17,990
80 சதுர அடி கொண்ட அறைக்கு முக்கால் டன் ஏசி போதும். ஆன் செய்த 15 நிமிடங்களில், அறையில் போதுமான குளிர்ச்சி கிடைத்துவிடும்.
ஒரு டன்
வீடியோகான் 17,990
பேனசோனிக் 20,990
கோத்ரெஜ் 20,990
ஒனிடா 20,990
வோல்டாஸ் 22,000
எல்ஜி 22,990
சாம்ஸங் 22,990
ப்ளூஸ்டார் 26,990
ஹிடாச்சி 28,990
100 - 150 சதுர அடி கொண்ட அறைக்கு ஒரு டன் ஏசி போதும். ஆன் செய்த 20 நிமிடங்களில் அறை ‘ஜில்’லாகிவிடும்!
ஒன்றரை டன்
வீடியோகான் 21,490
கோத்ரெஜ் 24,490
ஒனிடா 25,490
வோல்டாஸ் 25,500
எல்ஜி 26,490
சாம்ஸங் 26,490
பேனசோனிக் 26,990
ப்ளூஸ்டார் 30,990
ஹிடாச்சி 32,990
160 - 180 சதுர அடி அறைக்கு இந்த ஏசி போதுமானது.
2 டன்
எல்ஜி 35,490
சாம்ஸங் 34,490
ஹிடாச்சி 39,000
கோத்ரெஜ் 33,900
ஒனிடா 33,900
ப்ளூஸ்டார் 37,500
பேனசோனிக் 33,000
வோல்டாஸ் 32,790
ஓ ஜெனரல் 39,990
200 - 240 சதுர அடி கொண்ட அறைக்கு 2 டன் ஏசி பொருத்தலாம்.
We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply Now!,For more info Email: healthc976@gmail.com , Call or whatsapp +91 9945317569
பதிலளிநீக்கு