அழகான உறவுகளுக்குள் சின்ன சின்ன சண்டைகள் அல்லது மோதல்கள் இருந்தால் தான், அந்த உறவு சற்று விறுவிறுப்போடு, நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோடு ஒன்றாக இருக்க முடியும். ஆனால் அவ்வாறு சண்டைகள் வரும் போது, ஈகோ வந்துவிட்டால், அது அந்த உறவையே முறித்துவிடும். அதிலும் வாழ்க்கை துணை கோபப்படுபவராக இருந்தால், நிறைய பொறுமை மற்றும சிறு சிறு விளையாட்டுகள் தெரிந்தி
ருக்க வேண்டும். அதிலும் காதலன் அதிகம் கோபப்பட்டால், சில சமயங்களில் அனைத்தும் இருவருக்கும் இடையில் முடிந்துவிட்டது போல் பேசுவார்கள்.
அதிலும் தவறுகளை ஆண்கள் செய்துவிட்டால், அவர்கள் அந்த தவறை ஒப்புக் கொள்வார்கள். ஆனால் அதையே பெண்கள் செய்துவிட்டால், அதைப் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். ஆகவே ஆண்கள் கோபப்படும் போது பெண்கள் சற்று பொறுமையாக இருந்து, அவர்களை ஒரு சிலவற்றால் சமாதானப்படுத்த வேண்டும். அது எப்படியென்று அனுபவசாலிகள் கூறுவதை படித்து பாருங்களேன்...
பெண்களே...
* உங்கள் காதலன் கோபமாக இருக்கும் உங்களுடன் பேச தயாராக இருந்தால், அப்போது அவர்களிடம் அவர் கோபமாக இருப்பதற்கான காரணத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டோ அல்லது நீங்கள் தவறு செய்ததால் கோபப்பட்டால், அதனை பற்றி தெளிவாக அவரிடம் பேசி, அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். இல்லை அவர்கள் பேச தயாராக இல்லையென்றால், அப்போது அவர்களுக்கு மெசேஜ் செய்து சமாதானப்படுத்த வேண்டும்.
* நிறைய ஆண்கள் நீங்கள் தவறு செய்துவிட்டதால் கோபப்பட்டு விட்டு, அந்த கோபத்தை குறைக்க வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் சமாதானப்படுத்தி பேச வரும் போது, அந்த பேச்சை ஏற்க நீங்கள் ஏதேனும் ப்ரூப் காண்பிக்க வேண்டும். இல்லை நீங்கள் தவறு செய்யாமல், காதலன் கோபப்பட்டுவிட்டால், அந்த நேரம் நீங்களும் கோபப்படாமல், அந்த பிரச்சனையை அவர்களுக்கு பேசி புரிய வைக்க வேண்டும். அப்படியிருந்தும் நம்பவில்லையென்றால், நம்பிக்கை இல்லாத உறவு நிலைக்காது. மேலும் அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால், அவர்கள் கோபமும், நிச்சயம் போய்விடும்.
* சில ஆண்கள் கோபமாக இருக்கும் போது தனியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்போது அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால், அவர்கள் பிறகு யோசித்து புரிந்து கொண்டு, பின்னர் வந்து பேசுவார்கள். ஆனால் சிலருக்கு அத்கைய இடைவெளி தேவைப்படாது. அபபோது அவர்களிடம் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பேச வேண்டும். இல்லையென்று விட்டுவிட்டால், அந்த உறவு எதையும் சரியாக தெரியாமல், பின்னர் முறிந்துவிடும்.
* உங்கள் உறவுகளை நீட்டிக்க வேண்டுமென்றால், அனைவரிடமும் பொறுமை இருக்க வேண்டும். சில சமயங்களில் கோபத்தால் பாசமே மறைத்துவிடும். அந்த நேரத்தில் உறவு நீடிக்க வேண்டுமென்றால் பொறுமையாகத் தான், அவர்களை சமாதானப்படுத்தி, குளுமையாக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு செயலை அவர்கள் முன்பு செய்து, சிறு ஜோக்குகள் செய்தும் சமாதானப்படுத்தலாம்.
* நீங்கள் தவறு செய்தால், அப்போது மறக்காமல் உங்கள் காதலனிடம் மன்னிப்பு கேளுங்கள். மன்னிப்பு கேட்பது என்பது பெரிய விஷயம் அல்ல, அவ்வாறு தவறு செய்து விட்டு, ஈகோவால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க மறுத்தால், பின் பிரிவைத் தான் சந்திக்க நேரிடும்.
* நீங்கள் தவறே செய்யாமல் இருக்கட்டும். இருந்தாலும் உங்கள் உறவு நிலைக்க, அந்த பொய்யை உண்மையாக்கி, ஒப்புக் கொள்ளுங்கள். அதுவே தவறு செய்திருந்தால், அந்த தவறை மறுக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அந்த பொய்யே அவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி, உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் சற்று நடந்து பாருங்கள். உங்கள் காதலன் சமாதானமாகிவிடுவான். மேலும் வேறு எப்படியெல்லாம் சமாதானப்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரிந்தாலும், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
romba thanks
பதிலளிநீக்கு