கோச்சடையன் கதை:
ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டு கே.எஸ் ரவிகுமாரின் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம் 'ராணா'. படம் ஆரம்பித்த வேகத்திலேயே ஹீரோவான ரஜினியின் உடல்நலக் குறைவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இப்போது அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாலும், ராணா படத்திற்கு தேவையான அளவு உடல் உத்வேகத்தை ரஜினி அடையவில்லை என்று கூறி ராணா படத்தின் படப்பிடிப்பை தள்ளி போட்டிருக்கிறார் இயக்குனர். இந்நிலையில் தன் உடலுக்கு சக்தியூட்ட ரஜினி தனது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கத்தில் ’கோச்சடையான்’ என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
கி.பி. 710 முதல் 735 வரை அரசாட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் கோச்சடையன். இவனது முழு பெயர் “கோச்சடையான் ரணதீரன்”. இவனது தந்தையார் பெயர் அரிகேசரி மறவர்மன். பட்டம் சூட்டியது : கி.பி. 710
சேரர்களையும் சோழர்களையும் விஞ்சி, மராட்டிய மாநிலம் வரை சென்று அங்கு மங்களாபுரத்தில் (அது தற்போது மங்களூர் என்றழைக்கப்படுகிறது) தனது இராச்சியத்தை நிறுவியவன் இந்த கோச்சடையன். அதன் பின்னர் மத்தியில் ஆண்ட சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்தான்..
கோச்சடையன் ரணதீரன், மாறவர்மன் அரிகேசரிக்குப் பின்னர் பட்டம் எய்தினான். இவனும் தனது ஆட்சிக் காலத்தில் (கி.பி. 670-710) பல போர்களைச் செய்து வெற்றி கண்டான். இவன் தென்னகத்தில் இறைமையைப் பெறுவதற்குப் பல மன்னர்களுடன் போரிட வேண்டியிருந்தது. இவனது வெற்றியைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. ரணதீரன் சேரர், சோழர், கொங்கர், கர்நாடர், ஆய்மன்னர் போன்றோரைப் போரில் வென்றான். சேரரை வென்றதால் வானவன் என்றும், சோழரை வென்றதால் செம்பியன் என்றும், கர்நாடரை வென்றதால் மதுர கருநாடகன் என்றும், கொங்கரை வென்றதால் கொங்கர் கோமான் என்றும் புகழப்பட்டான். இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டின் ஆதிக்கம் மேலும் பெருகியது. ரணதீரன் சாளுக்கியரை முறியடித்ததாகவும் தெரிகிறது.
கோச்சடையன் ரணதீரனின் புதல்வன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765)ஆவான். தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்தான். அதற்கு முன்பே பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும் கொங்கு நாட்டு உரிமை பற்றிப் பகைமை ஏற்பட்டிருந்தது. இக்காரணங்களால் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் இவனது ஆட்சியின்போது பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தான். இப்போரில் பாண்டியன் வெற்றியடைந்தான்.
கோச்சடையன் ரணதீரன் தனது நாட்டை விரிவுபடுத்த எண்ணி வடக்கில் உள்ள மாளவ நாட்டை நோக்கிப் படையெடுத்தான். இப்போரிலும் வெற்றி பெற்றான். பின்னர் மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான்.
அதன் பின்னர்க் கங்கருடன் போர்புரிந்து வென்று, அவர்ளைக் கப்பம் கட்டச் சொல்லி,கங்க மன்னரது மகளான பூசுந்தரியை மணம் செய்து கொண்டான். இவனது ஆட்சியில் பாண்டிய நாடு உயர்வடைந்தது எனலாம்.
இம்மன்னனுக்கு முதலாம் இராசசிம்மன், தேர்மாறன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவன் சிறந்த சிவ பக்தனாகவும் விளங்கினான். வேதங்ளைக் கற்றுத் தேர்ந்த பிராமணர்களுக்கு மிகவும் உதவினான். கர்ப்ப தானங்களும், துலாபார தானங்களும் செய்து உயர்வடைந்தான்.
இவனது காலத்தில் நடந்த சம்பவங்களே ‘கோச்சடையானின்’ கதை எனக் கருதப்படுகிறது
ஏற்கனவே தனது அப்பாவை வைத்து சௌந்தர்யா தயாரித்துக் கொண்டிருந்த ’சுல்தான் தி வாரியர்’ என்ற அனிமேஷன் திரைப்படம் ‘தீரா’ என பெயர் மாற்றப்பட்டு, பின் சௌந்தர்யாவின் திருமணத்தால் தாமதமாகி, கடைசியில் ராணா படத்தின் துவக்கத்தால் நின்று போனது. எனவே நின்று போன ‘தீரா’ படம் தான் மறுபடியும்‘கோச்சடையான்’ என தொடரப்படுகிறதோ என்ற பெரும் சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இரு படங்களுக்கும் அனிமேஷன், 3டி, ராஜா காலத்துக்கதை என பல ஒற்றுமைகள் இருப்பதும் இந்த சந்தேகத்துக்கு காரணமாக உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக