குயிலே.. குயிலே... குயிலக்கா...
குயிலே.. குயிலே... குயிலக்கா..!
நீ கூவும் குரல் தேனக்கா...!
வானம்பாடி போலவே நீ தினமும்
'கானம்'பாடி சுற்றுகிறாய்..!
இவ்வளவு அழகாய் பாடுவற்கு
எங்கே நீ கற்றுக் கொண்டாய்..!
நானும் உன்போல் பாடுவதற்கு
எனக்கும் சொல்லேன் குயிலக்கா..!
உன் நிறம் தான் கறுப்பக்கா..!
உண் கண் நிறமோ சிவப்பக்கா..!
உன் உருவம் சிறிதே ஆனாலும்
உன் குரல் வளமோ அழகக்கா..!
நீ தூரத்தில் கூவும் குரல் கேட்டு
என் செல்லத் தம்பி விளம்புகிறான்..!
யாரண்ணா அங்கு பாடுவது
என் முன்னே வந்து பாடச் சொல்..!
நீங்கள் வாழ மரமில்லை..?
மரங்களை வைக்க எங்களுக்கு மனமில்லை
வனங்கள் மறைந்து போயினவே
என வேறிடம் செல்ல போகிறாயோ...!
எங்கே நீ பறந்து சென்றாலும்
எங்களை நீ மறவாதே..!
நீ வாழ நாங்கள் அரும் பெரும்
மரங்களை மீண்டும் வளர்கின்றோம்..!
வனங்கள் இல்லை என்று வாடாதே..!
மீண்டும் வனங்களை உருவாக்குகின்றோம்..!
இருப்பிடம் தேடி வேறிடம் போகாதே
உன்னை இரு கரம் கூப்பி கேட்கின்றோம்..!
அன்பாக இருக்கனும்:
அன்பாக இருக்கனும்...
ஆசைகளை அடக்கனும்...
இனிமையாகப் பழகனும்...
ஈகை குணம் வளர்க்கனும்...
உண்மையையே பேசனும்...
ஊக்கத்தோடு படிக்கனும்...
எளிமையாக இருக்கனும்...
ஏற்றம் பெற உழைக்கனும்...
ஐயங்களைப் போக்கனும்...
ஒற்றுமையாய் வாழனும்...
ஓடி விளையாடனும்...
ஓளவை வழி நடக்கனும்...
ஃதே வாழ்வின் இலக்கணம்..!
யானையம்மா யானை:
யானையம்மா யானை..!
எம்மாம் பெரிய யானை ..!
கனத்த உடம்பு யானை..!
கருத்த நிற யானை..!
அசைந்து வரும் யானை..!
அழகு வடிவ யானை..!
முறக்காது யானை..!
முன் துதிக்கை யானை..!
அம்பாரி வச்ச யானை..!
அதிக பளு தூக்கும் யானை..!
வெண் தந்தம் யானை..!
விவேகமான யானை..!
இலை தழை தின்னும் யானை..!
இரும்பு பலம் யானை..!
கரும்பு தின்னும் யானை..!
காட்டு மலை யானை..!
குட்டி போடும் யானை..!
குதிக்கத் தெரியா யானை..!
கூர்ந்த மதி யானை..!
கூட்டமாய் வாழும் யானை..!
ஆலோலங்கிளி தோப்பிலே:
ஆலோலங்கிளி தோப்பிலே
அழகுக்கிளி வீட்டிலே!
ஆடுது பார் பைங்கிளி
பச்சைக்கிளி மூக்கிலே சிவப்பு நிறம் ஜொலிக்குதே!
பஞ்சவர்ணக் கிளியுண்டு
பச்சை நிறக் கிளியுண்டு
வெள்ளை நிறக் கிளியுண்டு
வெண்கொண்டையுள்ள கிளியுண்டு!
படகு போல சிறகுகளாம்
நீளமான இறகுகளாம்
குட்டியூண்டு கண்களாம்
குபீரென்று பறந்தோடுமாம்!
நெல், கம்பு தானியங்களை
நேர்த்தியாக உண்ணுமாம்
வளைந்திருக்கும் வாயாலே
வாகாய் பழங்களைத் தின்னுமாம்!
பிள்ளைகளுடன் விளையாடவே
கிள்ளை மொழி பேசுமாம்
மனிதருடன் பழகுமாம்
மானுடர் போலவே பேசுமாம்!
பிறந்த நாள் கவிதை:
உயிரே உறவே எந்தன் உமையாளின் மகனே
கன்னலே கனியமுதே கண் ஏசனின் கவிதையே
ஆயிரம் கதை சொல்லும் கண் கொண்ட ஆண் மயிலே
தின்னத் துடிக்கும் கன்னங்கள் கொண்ட திருமகனே
த்தரணியிலே நீ பிறந்து தவழ்ந்து நடந்து த்தோடு ஆண்டொன்று
தத்தித் தத்தி நீ நடை பயில அன்னமும் தடுமாறும்
ன்றெனக்கு இம்மழலை போட்டியாவெ ன்று குழம்பிப் போகும்
முழு நிலவே நீ சிரிக்க முத்துக்கள் முகம் சிவக்கும்
தளிர்க் கரமும் தவழ் நடையும் கொண்ட தனித்தழிழே
ல்லத்தில் விளையாடும் மழலையேந ல்லறம் சொல்கிறேன்
பிறருக்கு நன்மை செய்யும் குணம் வளர்ப்பாய் பிறைநிலவே
(இ)றந்தாலும் உன் பெயரை இவ்வுலகம றக்காமலிருக்கச் செய்வாய்
(இ)ந்திய மண்ணில் பிறந்த ஈடற்ற (இ)ந்தியன் நீயெனக் காட்டுவாய்
தமிழுக்கும் தரணிக்கும் புகழ் சேர்க்க தமிழே நீ எழுவாய்
நாள் நட்சத்திரம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை நாசப்படுத்துவாய்
(து)ள்ளி விளயாடும் மானே நீ ஏழைகளுக்கு ( வ)ள்ளலாவாய்..!