இன்றைய காலத்தில் பெரும்பாலும் வரும் இதய நோயான மாரடைப்பு ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அத்தகைய காரணங்களில் ஒன்று தான் உண்ணும் உணவுகள். ஏனெனில் உண்ணும் உணவுகளில் ஒரு சில உணவுகள் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் எந்த உணவுகளால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்றும் மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதிலும் ஏற்கனவே இதயத்தில் பா
திப்பு இருப்பவர்கள், அத்தகைய இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை உண்ணாமல் தவிர்ப்பது நல்லது. மேலும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்றால், இப்போது கூறும் உணவுகளை அதிகம் உண்ணாமலும், உடலில் கலோரிகள் 2000 மேல் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் டயட்டில் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சேர்த்து வர வேண்டும். இப்போது எந்த உணவுகள் மாரடைப்பை ஏற்படுத்தும் என்று பார்ப்போமா!!!
சீஸ் மற்றும் வறுத்த உணவுகள்: அடிக்கடி பசி எடுக்கும் போது வெளியே எங்கேனும் சென்றால், சீஸ் அதிகம் பயன்படுத்தும் உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள் என்று தான் சாப்பிடத் தோன்றும். ஆனால் அவ்வாறு சாப்பிட்டால், அதில் உள்ள கெட்ட கொழுப்புக்கள், உடலில் சேர்ந்து இரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும். இதனால் தமனிகளில் கொழுப்புக்கள் சேர்ந்து அடைப்புகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், வேறு பல இதய நோய்கள், ஏன் மாரடைப்பு கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகவே அப்போது சூப் வகைகளில் ஏதேனும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆல்கஹால்: ஆல்கஹாலில் ஒன்றான ரெட் ஒயினை அவ்வப்போது ஒரு டம்ளர் சாப்பிட்டால், மாரடைப்பை தடுக்கலாம் என்று பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையே அதிகமாக சாப்பிட்டால், அதற்கான எதிர்பலன் தான் கிடைக்கும். ஏனெனில் பொதுவாக மாரடைப்பிற்கு ஆல்கஹாலும் ஒரு பெரும் காரணம். அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே தான், அதிக அளவில் ஆல்கஹால் அருந்துபவருக்கு விரைவில் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அவை மாரடைப்பிற்கும் வழிவகுக்கிறது.
சைனீஸ் உணவுகள்: சைனீஸ் உணவுகளில் அதிகமான அளவில் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்க்கின்றனர். அதனால் தான் சைனீஸ் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம் என்று கூறுகின்றனர். அதிலும் அந்த உணவுகளில் அஜினோமோட்டோ மற்றும் சோயா சாஸ் என்னும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களையும் சேர்க்கின்றனர். மேலும் உடலில் 1500 மில்லி கிராம் சோடியம் இருப்பது இதயத்திற்கு பெரும் பாதிப்பானது. அத்தகைய அளவு சோயா சாஸில் இருக்கிறது. சைனீஸ் உணவுகள் அதிக சுவையுடன் இருப்பதற்கு அந்த சோயா சாஸ் தான் காரணம். ஏனெனில் அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்பதோடு, இதய நோயும் ஏற்படுகிறது.
அதிகமான கிளிசரின் உணவுகள்: கார்ன் ப்ளேக்ஸ் மற்றும் வெள்ளை பிரட்களில் அளவுக்கு அதிகமான அளவில் கிளிசரின் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இதனை அதிகமான அளவில் சாப்பிடுவதால், இதயம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்படுகிறது. ஆகவே இதனை இதய நோய் இருப்பவர்கள், முற்றிலும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் குறைந்த அளவில் உட்கொண்டால் போதுமானது.
சர்க்கரை: சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை உண்பதும் இதயத்திற்கு சரியானதல்ல. ஏனெனில் அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவை ஏற்படுத்தும். மேலும் இதில் உள்ள பொருட்களும் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.
ஆகவே மேற்கூறிய உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் ஆரோக்கியமானமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக