நீங்கள் அகத்திய மகரிஷியை நேரில் தரிசிக்க வேண்டுமா?
கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை
தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில்
அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில்
வருவார்.
மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.
இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம்
சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன
வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால்
மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள்
தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.
அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.
பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு
விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும்.
முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப்
பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது
நிஜம்.
அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன்
வேறில்லை;
"எம்மதமும் சம்மதம்., எம்மதமும் என்மதம்"
பதிலளிநீக்குஜெய் விக்ணேஷ்...
மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை முட்டாள்களாக்கும் செயலிலுருந்து அவர்களை விடுவித்து நல்வழிப்படுத்த ஒரு சிறு முயற்சி...
கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்.
குறிப்பாக மதத்தலைவர்களிடமிருந்தும்... மதகுருமார்களிடமிருந்தும் பதில்கள் வரவேற்கப்படுகின்றன...
தெரி[ளி]ந்தவர்கள் பதில் கூறலாம்...
தெரி[ளி]யாதவர்களுக்கு தெளி[ரி]வுபடுத்தப்படும்...
ஓம்கார்...
நல்லதே நடக்கட்டும்...
ஆனந்தமாய் இரு...
1] மதம் என்றால் என்ன?
அவை எத்தனை?
அவை யாவை?
அதன் பொருள் என்ன?
2] ஆன்மீகம் என்றால் என்ன?
3] தியானம் என்றால் என்ன?
அதற்கு விளக்கம் தேவை...!
4) தேவன்
ஆண்டவன்
இறைவன்
கடவுள்
நாசி
இவை யாவை? விளக்கவும்...
Contact: www.facebook.com/laalbabaji
laalbabaji@gmail.com
unnul erundhu kelvi ketka vaikum avane ungal kelvikku pathil puriya vaipaar...
பதிலளிநீக்கு