வெள்ளி, 6 டிசம்பர், 2013

உடல் எடை, தொப்பையை குறைக்க சில வழிகள்...

இந்த காலத்தில் உடல் எடை பற்றிய பிரச்சனைகள் தான் அதிகம் உள்
ளன.

சிலர் உடல் எடை அதிகவில்லை என்ற கவலையுடன் இருக்க, சிலருக்கு உடல் எடை குறையாமல் அவஸ்தைப்படுகின்றனர்.

இதற்கு வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்கள் தான் முக்கிய காரணமாகும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஆகவே அவற்றை கண்டிப்பாக தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் தினமும் குறைந்தது 4-5 பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

உணவு நேரம்

எந்த வேளையிலும் உணவை தவிர்க்க கூடாது. மேலும் அவ்வாறு உண்ணும் உணவையும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.

இல்லாவிட்டால் அதிகமான பசியெடுத்து உண்ணும் உணவும் அதிகமாகிவிடும். பின் உடலில் உள்ள மெட்டபாலிக்கின் அளவு குறைந்து, உடல் எடை குறையாமல் தொப்பை அதிகரித்துவிடும். சொல்லப்போனால், சாப்பிடாமல் இருந்தால் தான் உடலில் தொப்பை ஆரம்பமாகும்.

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அதற்கு அவோகேடோ, பாதாம், ஆப்ரிக்காட், ஆப்பிள், முட்டை, தானியங்கள் போன்றவை தான் சிறந்தது.

இதனால் அடிவயிற்றில் இருக்கும் கொழுப்புகள், இதில் உள்ள சத்துக்களால் கரைந்து குறைந்துவிடும்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம் கூட வயிற்றில் கொழுப்புக்கள் சேர்வதற்கு ஒரு காரணம்.

ஆகவே மனதில் அழுத்தம் ஏற்படாமல் ரிலாக்ஸ் ஆக இருப்பதற்கு யோகா, தியானம் போன்றவற்றை செய்வது நல்லது.

ஆல்கஹால்

ஆல்கஹால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றை பருகினால், உடலில் தேவையில்லாத கலோரிகள் அதிகரித்து, எடை அதிகமாவதுடன் தொப்பை வந்துவிடும்.

உறக்கம்

போதுமான உறக்கமும் வயிற்றில் உள்ள கொழுப்புக்களை குறைப்பதற்கு உதவும். எப்படியெனில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் குறைய ஆரம்பிக்கும்.


பின் அந்த நேரத்தில் நாம் எந்த உணவை உண்டாலும், அவற்றை உடலானது முற்றிலும் உறிஞ்சி உடல் எடையை அதிகரித்துவிடும்.

உடற்பயிற்சி

உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதனால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவு அதிகரிக்கும்.

அவ்வாறு மெட்டபாலிசத்தின் அளவு அதிகரித்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும்.

உதாரணமாக வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல், டான்சிங் போன்றவை எடையை குறைக்க உதவும் சிறந்த உடற்பயிற்சிகள்.


பொன்னாவரை கீரையின் விதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர உடலில் அதிக வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர், மலம், சிறுநீர் வழியாகவும் வெளிப்பட்டு உடல் பருமன் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக