திங்கள், 2 டிசம்பர், 2013

சிறுநீரகக் கற்கள்... ஓர் எளிய தீர்வு.!

மனித உடலின் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் முக்கியமான உறுப்புதான் சிறுநீரகம். இடுப்புக்கு சற்றே மேலாக வயிற்றுக்கு பின் புறத்தில்,முதுகு தண்டின் அருகாமையில் அமைந்திருக்கும். இதன் ுக்கிய வேலை குருதியில் இருக்கும் தேவையற்ற அல்லது மிகையாக இருக்கும் உப்புகளை பிரித்து நீராக வெளியேற்றுவதே ஆகும். இவை தவிர உடலில் இருக்கும் அமிலங்களின் அளவினை கண்காணித்து சமநிலையை பேணும் பணியினையும் சிறுநீரகம் செய்கிறது.

சிறுநீரக பாதிப்புகள் பலவாக இருந்தாலும், இந்த பதிவில் சிறுநீரக கற்களை பற்றி மட்டுமே தகவல்களை பகிர விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லிட்டர் அளவுக்காவது தண்ணீரை உள்ளெடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு குறைவாக நீரை உள்ளெடுக்கும் போது சிறுநீரகம் பிரிக்கும் கழிவு உப்பின் செறிவானது சிறுநீரில் அதிகரிக்கும். இந்த உப்புகள் சிறுநீரக பாதையில் படிமஙக்ளாக படிந்து கற்களாய் உருவாகும்.

நாளடைவில் இவ்வாறு உருவாகும் கற்கள் சிறு நீரகபாதையில் தடையினை உண்டாக்கி அடைப்பை ஏற்படுத்தும். அப்போது தாங்க இயலாத அளவில் வலி உண்டாகும். ஆங்கில மருத்துவத்தில் பல புதிய முறைகளும் தீர்வுகளும் இருந்தாலும், சிகிச்சைகள் செலவு கூடியதும் பக்க விளைவுகளை உண்டாக்குவதாகவும் கருத்துக்கள் உள்ளன.

இந்த கற்களை கரைத்து வெளியேற்ற நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரெ எளிமையான இயற்கை மருத்துவ முறைகள் பலவற்றை சொல்லியுள்ளனர். 

சிறுநீரக கற்களை முற்றாக கரைத்து சிறுநீரில் வெளியேற வைக்க தினமும் காலையில் வாழை தண்டு சாறு எடுத்து ஒரு குவளை வீதம் பதினைந்து நாட்கள் அருந்தினால் எத்தகைய சிறுநீரக கல்லும் முற்றாக கரைந்து வெளியேறும் என்று சொல்லும் தேரையர், வாழைத் தண்டு சாற்றினை பதினைந்து நாள் இடைவெளியில் ஒரு தடவை வீதம் அருந்தி வருபவர்களுக்கு சிறுநீரக நோய்கள் எப்போதும் அண்டாது என்றும் சொல்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக