வியாழன், 30 மே, 2013

பாரதத்தின் பெருமைகள் !!

1.எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்துபிடித்த நாடு.
2-பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர் 
பிறந்துவளர்த்த பூமி.
3-செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.
4-
கிரானைட்(சலவைக் ஆண்டுகளுக்கு)கல்லால்
கட்டபட்ட உலகின் முதல்ஆலயம்(தஞ்ச­
 பிரகிதீஸ்வர்ர்)உள்ள நாடு.
5- 
உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும் இரயிவே அமைப்பு உள்ள நாடு.
6- 
உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள
நாடு.
7-
உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட
நாடு (கி.மு.700இல்)
8-1896-
ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.
9-
மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன் முதலாக ஆறிமுகப்படுத்திய நாடு.
10-
உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள நாடு.
11- 
உலகின் மிகப் பழமையான, தொடர்சியான கலாச்சரம் கொண்டுள்ள நாடு.
12-
தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.
13- 
உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு
14- உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து கொண்ட
மிகப் பழமையான நகரைக் கொண்டுள்ள நாடு.
15-
வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர் தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.
16-
அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு(சுசுரூந்தா அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுகிறார . 2600 ஆண்டுகளுக்கு முன்னதாக அவரும்,அவருடைய விஞ்ஞானிகளும் கண்புரை சிகிச்சை,செயற்க­  உறுப்பு,எலும்புமுறிவுகள்,சிறுநீரக கற்கள்,
மூளை அறுவை சிகிச்சைக் கருவிகளைப் 
பயன்படுத்தியிருக்கிறார்கள்).
17-5000 
ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின் கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான நாகரிகத்தை உருவாக்கிய நாடு.
18-
முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு (இந்து,புத்தம் ,சைனமதம்,சீக்கியம் .உலக மக்கள் தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப்
பின்பற்றுகின்றனர்
19-
வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.
20-
உலகில் விஞ்ஞானிகளையும்,பொறியியல் வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது நாடு.
21-
குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு(ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்). 
22-
நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த நாடு.
23-
காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம் உதித்த நாடு.
24-
முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்).
25-
இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு(35 வயதுக்குட்பட்டவரகள் 1.71 விழுக்காட்டினர் .அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்). ஆண்டுகளுக்கு
மேலே கூறப்பட்ட அத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான நாடு பாரதம் தான். 
நாமும் பெருமை படுவோம் இந்த புண்ணிய பூமியில்
பிறந்ததற்கு !!

வெள்ளி, 24 மே, 2013

234 தொகுதிகளில் முதல் 50 இடம் பிடித்த எம்.எல்.ஏ.க்கள்.... (Top 50 of MLA)

எம்.எல்.ஏ. செயல்பாடு... மக்கள் மதிப்பீடு.....

234 தொகுதிகளில் முதல் 50 இடம் பிடித்த எம்.எல்.ஏ.க்கள்....

50. என்.எஸ்.என். நடராஜ் ( அதிமுக), காங்கேயம் தொகுதி
49. எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் (அதிமுக ), நெய்வேலி தொகுதி
48. டி.பி.பூனாட்சி (அதிமுக), மண்ணச்சநல்லூர் தொகுதி
47. எம். முத்துராமலிங்கம் (அதிமுக), திருமங்கலம் தொகுதி
46. கே.பழனிச்சாமி (அதிமுக), எடப்பாடி
45. ஆர். மனோகரன் (அதிமுக), திருச்சி கிழக்கு
44. கே.கோபிநாத் (காங்கிரஸ்), ஓசூர்
43. கே.பி. பரமசிவம் ( அதிமுக), பல்லடம்
42. ஜி.அன்பழகன், (திமுக), கும்பகோணம்
41. ஆர்.சீனிவாசன், (அதிமுக), ஆற்காடு
40. ஏ.சௌந்தரபாண்டியன் (திமுக), லால்குடி
39. ஆர் மணிமாறன் (அதிமுக), பூந்தமல்லி
38. கே.கோபால்சாமி (அதிமுக), ராஜபாளையம்
37. எஸ்.விஜயதாரணி ( காங்கிரஸ்), விளவங்கோடு
36. ஆர்.சாமி (அதிமுக), மேலூர்
35. கோவி.செழியன் (திமுக), திருவிடைமருதூர்
34. வி.முத்துக்குமார் (தேமுதிக), விருத்தாசலம்
33. ஆர்.எம். பாபுமுருகுவேல் (தேமுதிக), ஆரணி
32. கே.ராஜூ (அதிமுக), மதுரை மேற்கு
31. கே.ஆர்.பெரியகருப்பன் (திமுக), திருப்பத்தூர்
30. சி.கிருஷ்ணன் (அதிமுக), ஓமலூர்
29. டாக்டர் எஸ்.துரையப்பா (அதிமுக), வாசுதேவநல்லூர்
28. டி.மலரவன் (அதிமுக), கோவை வடக்கு
27. டி.ஜெயக்குமார் (அதிமுக), ராயபுரம்
26. என்.ஆர்.ரெங்கராஜன் (காங்கிரஸ்), பட்டுக்கோட்டை
25. எஸ்.ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்), கிள்ளியூர்
24. எம்.எஸ்.எம். ஆனந்தன் (அதிமுக), திருப்பூர் வடக்கு
23. பி.எல். சுந்தரம் (சிபிஐ), பவானிசாகர்
22. கேபி.முனுசாமி (அதிமுக), கிருஷ்ணகிரி
21. டி.ஆர்.பி. ராஜா (திமுக), மன்னார்குடி
20. கே.பி.அன்பழகன் (அதிமுக), பாலக்கோடு
19. எஸ்.குணசேகரன் (சிபிஐ), சிவகங்கை
18. எம்.சி.சம்பத் (அதிமுக), கடலூர்
17. கே.சி.வீரமணி (அதிமுக), ஜோலார்பேட்டை
16. சி.த.சோழன் பழனிச்சாமி (அதிமுக), காரைக்குடி
15. கே.உலகநாதன் (சிபிஐ), திருத்துறைப்பூண்டி
14. வி.சி.ஆறுகுட்டி (அதிமுக), கவுண்டம்பாளையம்
13. ஆர்.காமராஜ் (அதிமுக), நன்னிலம்
12. என்.வி.காமராஜ் (அதிமுக), வேதாரண்யம்
11. எஸ்.பி.வேலுமணி (அதிமுக), தொண்டாமுத்தூர்
10. கே.பி.பி. பாஸ்கர் (அதிமுக), நாமக்கல்
09. டாக்டர் புஷ்ப லீலா ஆல்பம் (திமுக) பத்மநாபபுரம்
08. ஆர். விஸ்வநாதன் (அதிமுக), நத்தம்
07. ஆர்.வைத்தியலிங்கம், (அதிமுக), ஒரத்தநாடு
06. ஆர். துரைக்கண்ணு (அதிமுக) , பாபநாசம்
05. பி.தங்கமணி (அதிமுக), குமாரபாளையம்
04. எம்.ரத்தினசாமி (அதிமுக), திருவையாறு
03. ஆர்.சின்னசாமி (அதிமுக), சிங்காநல்லூர்
02. எஸ். தாமோதரன் (அதிமுக) கிணத்துக்கடவு
01. கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக) கோபிச்செட்டிப்பாளையம்

வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்! ஐஸ் க்ரீம் மற்றும் குளிர் பானங்கள் வாய்க்கு மட்டுமே குளிர்ச்சியாக இருக்குமே தவிர


வெயில் காலம் ஆரம்பித்தாலே அனைவருக்கும் மனதில் ஒருவித பயமானது ஏற்படும். ஏனெனில் மற்ற காலங்களைத் தவிர, கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தாங்கிக் கொள்ளவே முடியாது. குறிப்பாக வெயில் காலத்தில் காதாரணமாகவே உடல் வெப்பமானது விரைவில் அதிகரித்துவிடும். ஆகவே அப்போது சாப்பிடும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சில உணவுப் பொருட்களும் உடலில் வெப்பத்தை அதிகரித்துவிடும். இதனால் எப்போதும் மனதில் ஒருவித எரிச்சல், கவனக்குறைவு, தூக்கமின்மை, வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். 

அதிலும் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர வெயில் அல்லது கத்திரி வெயிலின் போது வீசும் வெயிலின் தாக்கத்தை தாங்கவே முடியாது. எனவே இந்த மாதத்தில் உணவுகளில் கட்டுப்பாட்டுடனும், கவனமாகவும் இருந்தால், கோடை வெயிலில் இருந்து தப்பிக்கலாம். மேலும் கோடையில் நிறைய தண்ணீர் மற்றும் பழங்களை சாப்பிட்டு, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதோடு, ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு உடல் வெப்பமானது அதிகம் இருக்கும். அத்தகையவர்கள் ஒருசில உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். 

அத்தகையவர்களுக்காகவும், உடல் வெப்பம் அதிகமாகாமல் இருக்கவும், கோடையில் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி நன்மை பெறுங்கள். 

கார உணவுகள் 
************* 
கார உணவுகளை கோடையில் மட்டும் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகளை சாப்பிட்டால், உடல் வெப்பமானது அதிகரிக்கும். அதிலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் மசாலாப் பொருட்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. 

சப்பாத்தி
******** 
கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் இந்த நேரத்தில் உடல் வெப்பமானது அதிகரிக்கும். எனவே பகல் நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக சாதத்தை எடுத்துக் கொள்வது நல்லது. 

பால் பொருட்கள்
*************** 
அன்றாடம் சாப்பிடும் பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவையும் உடல் வெப்பத்தை அதிரிக்கும். எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது. 

சிக்கன், நண்டு, இறால் 
********************* 
அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அத்தகையவர்கள் கோடையில் சிக்கன், நண்டு, இறால் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சிலசமயங்களில் சூட்டை கிளப்பி வயிற்றுப் பிரச்சனையான வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலில் இருந்து நீரை வெளியேற்றிவிடும். எனவே இதனை தவிர்ப்பதே நலம். 

ஜங்க் உணவுகள் 
*************** 
பர்கர், பிட்சா, பிரெஞ்ச் ப்ரைஸ் போன்றவை செரிமான மண்டலத்திற்கு கஷ்டத்தைக் கொடுப்பதோடு, சில நேரங்களில் அவை ஃபுட் பாய்ஸனையும் ஏற்படுத்தும். மேலும் இத்தகைய உணவுகள் உடலுக்கு தீமையையே கொடுக்கக்கூடியது. இத்தகைய உணவுகளை அனைத்து காலங்களிலும் தவிர்ப்பதே உடலுக்கு சிறந்தது. 

காபி 
**** 
காபியும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. எனவே இதனை முடிந்த வரையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்தது. 

வறுத்த உணவுகள் 
***************** 
எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும், உடல் வெப்பம் அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையும் உண்டாகும். 

உலர் பழங்கள் 
************* 
உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை தான். அதே சமயம் அதில் உடலை வெப்பப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிட வேண்டும். 

மாம்பழம் 
********* 
கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழம் சாப்பிட்டால், உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும். இதுவும் அளவுக்கு அதிகமானால், அவை உடல் வெப்பத்தை கிளப்பிவிட்டு, பருக்களையும் உண்டாக்கும். எனவே இந்த பழத்தை அளவாக சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள், இதனை தவிர்ப்பதே நல்லது. 

ஐஸ் க்ரீம் மற்றும் குளிர் பானங்கள் 
********************************* 
குளிர்ச்சியாக இருக்கும் ஐஸ் க்ரீம் மற்றும் குளிர் பானங்கள் இரண்டுமே உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது. இவற்றை சாப்பிட்டால், வாய்க்கு மட்டுமே குளிர்ச்சியாக இருக்குமே தவிர, வயிற்றிற்கு அவை சென்றால், வெப்பத்தை தான் அதிகரிக்கும்.