திங்கள், 17 டிசம்பர், 2012

தமிழனே வெளியே சொல்லாதே :
பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்.

தமிழன் உருப்படாததற்குப் பத்து காரண‌ங்கள்

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்!

இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.

கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை.

தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன?

*முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்!

எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால், அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாக &தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.

* தமிழன் அறிவாளி. ஆனால், புத்திசாலி அல்ல. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைக்ள்). பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல்கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.


* மிருகங்களில் நாய்... பாலில் பெண்பால்... இனத்தில் தமிழன்... இந்த மூன்றுக்கும் ஒரு வினோத ஒற்றுமை உண்டு.தம்மவர்கள் முன்னேறினால் பொறுக்காது.

ஒரு நாய் அதிகம் குரைப்பதே தெருவில் இன்னொரு நாய் வரும்போதுதான். அது போல சக பெண்ணின் முன்னேற்றம் இன்னொரு பெண்ணைத்தான் மனம் சுருங்கச் செய்யும். இது உண்மை. அதைப்போலவே ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான்.

இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்.


அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ பிழைக்க வந்தால், தான் காலூன்றியவுடன், தன் மண்ணில் இருந்து பிழைக்க வருபவனைத் தேடிப்பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்கள். திட்டமிட்டு அழைத்துக்கொண்டும் வருகிறார்கள். இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் மலையாள வீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டு. அதுபோல கடை உரிமையாளர்களும் உண்டு. குறைந்தது அவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும். தமிழனுக்கு அதிக வாடகை. நடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!

*பெண்ணாசை

பெண்ணாசைக்கு தமிழினம் , மங்கோலிய இனம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது
என்றாலும் கூட , தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம்
அதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள் ,
பின்னால் வந்த குறு நில மன்னர்கள் , என்று பெண்ணாலும் அழகிய பெண்களை
முன் நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால்
அழிந்தவர்கள் என்று வரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக
நிறுவனங்களை உருவாக்கி அதை பிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப்
பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் . காலகாலமாக இதை மற்றவர்கள்
பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.


* மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும், தங்கள் மொழி, இன உணர்வைக் காக்க, சாதி மத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளி வைப்பார்கள். உதாரணமாக கிறித்தவரான கே.ஜே.யேசுதாஸின் குரல், தினசரி ‘அரிவராசனம்’பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்க வைக்கும். அது மலையாளிகளின் ஒற்றுமை. ஆனால், தமிழனோ மத, சாதி உணர்வுகளுக்காக, தமிழ் உணர்வையும், தமிழின உணர்வையும் தரையில் போட்டு மிதிப்பான்.

இலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும்தான். ஆனால், தமிழர்களில் பெரும்பான்மையான இந்துக்கள், புத்தமதச் சிங்களன்தான் நமக்கு நெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ் முஸ்லிம்களை எதிர்த்தனர். அங்கே மொழியை விட மதம் பெரிதாகப் போனது.

வடக்கு மாகாணத் தமிழன், கிழக்கு மாகாணத் தமிழனை ‘மட்டக்களப்பான் மடையன்’ என்று சொல்லி& தாழ்ந்த ஜாதி என்று காரணம் காட்டித் தள்ளி வைத்தான். புறக்கணித்தான். அங்கே மொழியை விட சாதி பெரிதாகப் போனது. அங்கும் இன உணர்வில்லை.



* தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். ஒரு வங்காளி எங்கு போனாலும் வங்காளியாகவே இருப்பான். ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசார வேர்களைக் கைவிடுவது இல்லை. ஆனால், தமிழன் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பொதுவாக உலக மக்களிடம் உள்ள இன உணர்வு தமிழனிடம் இல்லாததால் மரியாதை கிடைப்பது இல்லை. ஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.

* இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால்..? ஆங்கிலத்தில் பேசுவார்கள்!
நீங்கள் அறிந்த விஷயம் இது. ஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை. அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறது. தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சி!


* மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக உள்ள பல பகுதிகள்,தமிழின வரலாற்றின் களமாக இருந்த பல நிலங்கள், தமிழின கலாசாரமாக சின்னமாக இருந்த நிலங்கள்,நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல வளமான பகுதிகள், நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம்,மற்ற மாநிலத்தவரால் திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன. அப்போது திராவிட நாடு என்ற கனவில் இருந்த தி.மு.க.,அதையெல்லாம் எதிர்த்தால் அந்த மாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்று எண்ணி, தமிழ்ப் பெருமாநிலம் சிதறிப்போனதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. திராவிட நாடு என்ற சித்தாந்தம் காரணமாக பெரியாரும் இதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர். விரட்டப்பட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடோ திராவிடம் என்ற பெயரில் எல்லோரையும் தொடர்ந்து அனுமதித்தது. இங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர், அதன் பின்னர் தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டே, தங்கள் மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர். தமிழனை சுரண்டினர். தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மீட்டிங் பார்ப்பதில் குறியாக இருந்தான்.

* இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த நேரம்... காங்கிரஸ் கட்சி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகப் பிரதீபா பட்டீலை நிறுத்துகிறது. அவர் மராட்டியப் பெண்மணி. மராட்டியத்தில் காங்கிரஸும், சிவசேனாவும் எதிர்க்கட்சிகள். ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்னார், ‘‘பிரதீபா பட்டில் எங்கள் ஜென்ம விரோதக் கட்சியான காங்கிரஸ் ஆளாக இருக்கலாம். ஆனால் எங்கள் மண்ணின் மகள். மராட்டிய மாணிக்கம். எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டு, கூட்டணி&எதிரணி என்று பாராமல் பிரதீபா பட்டீலை ஆதரிக்கிறேன்’’என்று சொன்னார்.

ஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கிய பிரதீபா பட்டீலை, அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன் முதலாகக் கொண்டு வந்து அறிமுகக் கூட்டம் நடத்தி, பிரதீபா பட்டீலுக்கு பலம் சேர்த்து,ஒரு ஜனாதிபதித் தமிழன் வீழக் காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.

* ஆந்திராவோ, கர்நாடகாவோ, கேரளாவோ அந்த மொழி இனம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காக, ஒரு போராட்டம் நடந்தால், அரசாங்கம், அரசியல் தலைவர், ஆள்வோர் அதை அடக்கச் சொன்னாலும் அதிகார வர்க்கமும்,காவல்துறையும் போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும். அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்னவோ, நம் இன மொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வு அங்கு பலருக்கும் இருக்கும். அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல் செய்த தமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்தது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் தமிழ்நாட்டில்? நமது மீனவர்களை சிங்களக் கடற்படை என்ன செய்தாலும் கவலை இல்லை. ஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டு, சுடுநீரில் குளிப்பாட்டி,சொறிந்து விட்டு, சொடக்கெடுத்து, தலைவாழை இழைபோட்டு, உணவு ஊட்டி, பீடா மடித்துக்கொடுக்கும் தமிழக போலீஸ்...
தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காக, தமிழனுக்காக போராடினால் மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக் காவல்துறை.

* காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில் மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும், அது கட்சி அரசியலோடு நின்றுவிடும். கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். ஆனால், தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள் கொசுக்கள் போல நசுக்கப்பட்டபோதும்... அது பற்றிக் கவலைப்படாமல்,ஒரு நாளைக்கு கூட உருப்படியாகப் பலன் தராத ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்த தமிழக வாக்காளர்கள்...
தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்....

பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்.

சனி, 29 செப்டம்பர், 2012

குழந்தைப் பாடல்... யானையம்மா யானை... அழகுக்கிளி வீட்டிலே...


குயிலே.. குயிலே... குயிலக்கா...


குயிலே.. குயிலே... குயிலக்கா..!
நீ கூவும் குரல் தேனக்கா...!
வானம்பாடி போலவே நீ தினமும்
'கானம்'பாடி சுற்றுகிறாய்..!

இவ்வளவு அழகாய் பாடுவற்கு
எங்கே நீ கற்றுக் கொண்டாய்..!
நானும் உன்போல் பாடுவதற்கு
எனக்கும் சொல்லேன் குயிலக்கா..!

உன் நிறம் தான் கறுப்பக்கா..!
உண் கண் நிறமோ சிவப்பக்கா..!
உன் உருவம் சிறிதே ஆனாலும்
உன் குரல் வளமோ அழகக்கா..!

நீ தூரத்தில் கூவும் குரல் கேட்டு
என் செல்லத் தம்பி விளம்புகிறான்..!
யாரண்ணா அங்கு பாடுவது
என் முன்னே வந்து பாடச் சொல்..!

நீங்கள் வாழ மரமில்லை..?
மரங்களை வைக்க எங்களுக்கு மனமில்லை
வனங்கள் மறைந்து போயினவே
என வேறிடம் செல்ல போகிறாயோ...!

எங்கே நீ பறந்து சென்றாலும்
எங்களை நீ மறவாதே..!
நீ வாழ நாங்கள் அரும் பெரும்
மரங்களை மீண்டும் வளர்கின்றோம்..!

வனங்கள் இல்லை என்று வாடாதே..!
மீண்டும் வனங்களை உருவாக்குகின்றோம்..!
இருப்பிடம் தேடி வேறிடம் போகாதே
உன்னை இரு கரம் கூப்பி கேட்கின்றோம்..!


அன்பாக இருக்கனும்:
ன்பாக இருக்கனும்...
சைகளை அடக்கனும்...
னிமையாகப் பழகனும்...
கை குணம் வளர்க்கனும்...
ண்மையையே பேசனும்...
க்கத்தோடு படிக்கனும்...
ளிமையாக இருக்கனும்...
ற்றம் பெற உழைக்கனும்...
யங்களைப் போக்கனும்...
ற்றுமையாய் வாழனும்...
டி விளையாடனும்...
ஓளவை வழி நடக்கனும்...
தே வாழ்வின் இலக்கணம்..!

யானையம்மா யானை:
யானையம்மா யானை..!
எம்மாம் பெரிய யானை ..!
கனத்த உடம்பு யானை..!
கருத்த நிற யானை..!

அசைந்து வரும் யானை..!
அழகு வடிவ யானை..!
முறக்காது யானை..!
முன் துதிக்கை யானை..!

அம்பாரி வச்ச யானை..!
அதிக பளு தூக்கும் யானை..!
வெண் தந்தம் யானை..!
விவேகமான யானை..!

இலை தழை தின்னும் யானை..!
இரும்பு பலம் யானை..!
கரும்பு தின்னும் யானை..!
காட்டு மலை யானை..!

குட்டி போடும் யானை..!
குதிக்கத் தெரியா யானை..!
கூர்ந்த மதி யானை..!
கூட்டமாய் வாழும் யானை..!

ஆலோலங்கிளி தோப்பிலே:
ஆலோலங்கிளி தோப்பிலே
அழகுக்கிளி வீட்டிலே!
ஆடுது பார் பைங்கிளி
பச்சைக்கிளி மூக்கிலே சிவப்பு நிறம் ஜொலிக்குதே!

பஞ்சவர்ணக் கிளியுண்டு
பச்சை நிறக் கிளியுண்டு
வெள்ளை நிறக் கிளியுண்டு
வெண்கொண்டையுள்ள கிளியுண்டு!

படகு போல சிறகுகளாம்
நீளமான இறகுகளாம்
குட்டியூண்டு கண்களாம்
குபீரென்று பறந்தோடுமாம்!

நெல், கம்பு தானியங்களை
நேர்த்தியாக உண்ணுமாம்
வளைந்திருக்கும் வாயாலே
வாகாய் பழங்களைத் தின்னுமாம்!

பிள்ளைகளுடன் விளையாடவே
கிள்ளை மொழி பேசுமாம்
மனிதருடன் பழகுமாம்
மானுடர் போலவே பேசுமாம்!


பிறந்த நாள் கவிதை:
யிரே உறவே எந்தன் மையாளின் மகனே
ன்னலே கனியமுதே கண் ஏசனின் விதையே
யிரம் கதை சொல்லும் கண் கொண்ட ண் மயிலே
தின்னத் துடிக்கும் கன்னங்கள் கொண்ட திருமகனே
த்தரணியிலே நீ பிறந்து தவழ்ந்து நடந்து த்தோடு ஆண்டொன்று
த்தித் தத்தி நீ நடை பயில அன்னமும் டுமாறும்
ன்றெனக்கு இம்மழலை போட்டியாவெ ன்று குழம்பிப் போகும்

முழு நிலவே நீ சிரிக்க முத்துக்கள் முகம் சிவக்கும்
ளிர்க் கரமும் தவழ் நடையும் கொண்ட னித்தழிழே
ல்லத்தில் விளையாடும் மழலையேந ல்லறம் சொல்கிறேன்

பிறருக்கு நன்மை செய்யும் குணம் வளர்ப்பாய் பிறைநிலவே
(இ)ந்தாலும் உன் பெயரை இவ்வுலகம க்காமலிருக்கச் செய்வாய்
(இ)ந்திய மண்ணில் பிறந்த ஈடற்ற (இ)ந்தியன் நீயெனக் காட்டுவாய்
மிழுக்கும் தரணிக்கும் புகழ் சேர்க்க மிழே நீ எழுவாய்
நாள் நட்சத்திரம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை நாசப்படுத்துவாய்
(து)ள்ளி விளயாடும் மானே நீ ஏழைகளுக்கு ( வ)ள்ளலாவாய்..! 

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

உங்கள் காதலரை எப்படி கூல் பண்ணலாம்...


அழகான உறவுகளுக்குள் சின்ன சின்ன சண்டைகள் அல்லது மோதல்கள் இருந்தால் தான், அந்த உறவு சற்று விறுவிறுப்போடு, நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோடு ஒன்றாக இருக்க முடியும். ஆனால் அவ்வாறு சண்டைகள் வரும் போது, ஈகோ வந்துவிட்டால், அது அந்த உறவையே முறித்துவிடும். அதிலும் வாழ்க்கை துணை கோபப்படுபவராக இருந்தால், நிறைய பொறுமை மற்றும சிறு சிறு விளையாட்டுகள் தெரிந்தி
ருக்க வேண்டும். அதிலும் காதலன் அதிகம் கோபப்பட்டால், சில சமயங்களில் அனைத்தும் இருவருக்கும் இடையில் முடிந்துவிட்டது போல் பேசுவார்கள்.


அதிலும் தவறுகளை ஆண்கள் செய்துவிட்டால், அவர்கள் அந்த தவறை ஒப்புக் கொள்வார்கள். ஆனால் அதையே பெண்கள் செய்துவிட்டால், அதைப் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். ஆகவே ஆண்கள் கோபப்படும் போது பெண்கள் சற்று பொறுமையாக இருந்து, அவர்களை ஒரு சிலவற்றால் சமாதானப்படுத்த வேண்டும். அது எப்படியென்று அனுபவசாலிகள் கூறுவதை படித்து பாருங்களேன்...

பெண்களே...

* உங்கள் காதலன் கோபமாக இருக்கும் உங்களுடன் பேச தயாராக இருந்தால், அப்போது அவர்களிடம் அவர் கோபமாக இருப்பதற்கான காரணத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டோ அல்லது நீங்கள் தவறு செய்ததால் கோபப்பட்டால், அதனை பற்றி தெளிவாக அவரிடம் பேசி, அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். இல்லை அவர்கள் பேச தயாராக இல்லையென்றால், அப்போது அவர்களுக்கு மெசேஜ் செய்து சமாதானப்படுத்த வேண்டும்.

* நிறைய ஆண்கள் நீங்கள் தவறு செய்துவிட்டதால் கோபப்பட்டு விட்டு, அந்த கோபத்தை குறைக்க வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் சமாதானப்படுத்தி பேச வரும் போது, அந்த பேச்சை ஏற்க நீங்கள் ஏதேனும் ப்ரூப் காண்பிக்க வேண்டும். இல்லை நீங்கள் தவறு செய்யாமல், காதலன் கோபப்பட்டுவிட்டால், அந்த நேரம் நீங்களும் கோபப்படாமல், அந்த பிரச்சனையை அவர்களுக்கு பேசி புரிய வைக்க வேண்டும். அப்படியிருந்தும் நம்பவில்லையென்றால், நம்பிக்கை இல்லாத உறவு நிலைக்காது. மேலும் அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால், அவர்கள் கோபமும், நிச்சயம் போய்விடும்.

* சில ஆண்கள் கோபமாக இருக்கும் போது தனியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்போது அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால், அவர்கள் பிறகு யோசித்து புரிந்து கொண்டு, பின்னர் வந்து பேசுவார்கள். ஆனால் சிலருக்கு அத்கைய இடைவெளி தேவைப்படாது. அபபோது அவர்களிடம் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பேச வேண்டும். இல்லையென்று விட்டுவிட்டால், அந்த உறவு எதையும் சரியாக தெரியாமல், பின்னர் முறிந்துவிடும்.

* உங்கள் உறவுகளை நீட்டிக்க வேண்டுமென்றால், அனைவரிடமும் பொறுமை இருக்க வேண்டும். சில சமயங்களில் கோபத்தால் பாசமே மறைத்துவிடும். அந்த நேரத்தில் உறவு நீடிக்க வேண்டுமென்றால் பொறுமையாகத் தான், அவர்களை சமாதானப்படுத்தி, குளுமையாக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு செயலை அவர்கள் முன்பு செய்து, சிறு ஜோக்குகள் செய்தும் சமாதானப்படுத்தலாம்.

* நீங்கள் தவறு செய்தால், அப்போது மறக்காமல் உங்கள் காதலனிடம் மன்னிப்பு கேளுங்கள். மன்னிப்பு கேட்பது என்பது பெரிய விஷயம் அல்ல, அவ்வாறு தவறு செய்து விட்டு, ஈகோவால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க மறுத்தால், பின் பிரிவைத் தான் சந்திக்க நேரிடும்.

* நீங்கள் தவறே செய்யாமல் இருக்கட்டும். இருந்தாலும் உங்கள் உறவு நிலைக்க, அந்த பொய்யை உண்மையாக்கி, ஒப்புக் கொள்ளுங்கள். அதுவே தவறு செய்திருந்தால், அந்த தவறை மறுக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அந்த பொய்யே அவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி, உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

ஆகவே மேற்கூறியவாறெல்லாம் சற்று நடந்து பாருங்கள். உங்கள் காதலன் சமாதானமாகிவிடுவான். மேலும் வேறு எப்படியெல்லாம் சமாதானப்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரிந்தாலும், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

பற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க...


பற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க, இதெல்லாம் வெச்சு ப்ரஷ் பண்ணுங்க...

பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகிவிடுமா என்ன? பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களுக்கு நிறைய ம
கத்துவம் உள்ளது. அதேப்போல் தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனைத்தும் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் தான். அது என்னவென்று பார்ப்போமா!!!

வேப்பங்குச்சி- இது ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி தான் தங்கள் பற்களை துலக்குகின்றனர். அதனால் தான், அவர்கள் பற்கள் இன்றும் உறுதியாக இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் இருக்கிறது. மேலும் இதனைக் கொண்டு பற்களை துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச்சென்று, துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமலும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும்.1

உப்பு- உப்பைக் கொண்டும் பற்களை துலக்கலாம். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் உள்ளது. இதனால் பற்களில் உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற்களில் வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக் கொண்டு பற்களை துலக்கலாம். மேலும் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும். ஆகவே தினமும் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக் கொண்டு, பற்களை துலக்குங்கள், பின் பாருங்கள் அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.

கடுகு எண்ணெய்- கடுகு எண்ணெயை வைத்து பற்களை துலக்கினால், பற்கள் நன்கு வெள்ளையாக காணப்படும். இதுவும் பற்களை துலக்க ஒரு சிறந்த முறை. அதற்கு அரை டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயோடு, சிறிது உப்பை சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும்.

எலுமிச்சை- எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவாக இந்த எலுமிச்சை எத்தகைய அழுக்குகள் என்றாலும் நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள அழுக்குகளை நீக்காமலா இருக்கும். ஆகவே அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும் ஈறுகளை தேய்க்க வேண்டும். பின் பாருங்கள் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கிராம்பு- கிராம்பில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அத்தகைய கிராம்பு பற்களும் மிகவும் சிறந்தது. ஆகவே சிறிது கிராம்பு பொடியை வைத்து பற்களை தேய்க்க வேண்டும். இதனால் பற்கள் வெள்ளையாக இருப்பதோடு, பற்களில் வலிகள் ஏற்பட்டால், அதனை சரிசெய்துவிடும்.

ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்க, மேற்கூறிய பொருட்களையெல்லாம் பயன்படுத்துங்கள், பற்கள் நன்கு பளிச்சென்று மின்னும்

சேகுவேரா வாழ்க்கை வரலாறு: சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்...

சேகுவேரா: 

        

       சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக்கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்.

           பலப்பல கேள்விகள் அவரது வானத்தில் வல்லூறுகளாய்ப் பறந்தன. இந்தக் குழப்பமான சூழ்நிலையில்தான் 'சே' & காஸ்ட்ரோ சந்திப்பு!

           ஒரு மகத்தான வீரனை தனக்குள் இணைத்துக் கொண்ட தருணத்திலிருந்து கியூபா அரசியலில் எவருக்கும் அறியாத பரிணாம மாற்றங்கள் நிகழத்துவங்கின. வரைபடங்கள் விரிக்கப்பட்டன. புரட்சிக்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டன.

           பயிற்சி முழுவதுமாக முடிவடைந்த வீரர்கள் முழுமையாக கெரில்லாக்களாக மாறியிருந்தனர். புரட்சிக்கான நாள் குறிக்கப்பட்டது. இம்முறை காஸ்ட்ரோவின் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது. தனது கனவுகளை நிறைவேற்ற காலம் ஒரு மகத்தான வீரனைப் பரிசளித்திருக்கிறது எனும் நம்பிக்கை.

           அப்போது 'சே'வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் 'சே'வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந் திராத ஒன்று. இதனால்தான் 'சே' மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.

           'கால்கள்தான் என் உலகம்' என 'சே' ஒருமுறை தன் நண்பர் ஆல்பர்ட்டோவிடம் கூறியிருந்தார். 'என் கால்கள் பதியக்கூடிய பெருவெளி அனைத்தும் எனது! அதில் வாழும் அனைவரும் என் சகோதரர்கள்' எனும் பேருண்மையை அர்த்தப்படுத்தும் வாசகம் இது. இதனால்தான் காஸ்ட்ரோவிடம், 'கியூபாவுக்கு விடுதலை கிடைக்கும் வரைதான் நான் உங்களுடன் இருப்பேன். அதன்பின் நான் என் பயணத்தைத் தொடர்ந்து, வெவ் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவேன்' என அழுத்தமாகக் கூறியிருந்தார் 'சே'. காஸ்ட் ரோவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26&ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது.

           1957, ஜனவரி 17&ம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா யுத்தம். துவக்கத்தில் குழுவில் மருத்து வராகவும் லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற 'சே', தன் திறமை, துணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார். அவரது திறமை கண்டு வியந்த சக கியூபா வீரர் கள் அவரை பிரியத்துடன் 'சே' என அழைத்தனர். கடுமை யான ஆஸ்துமா துன்புறுத் தியபோதிலும், அடர்வனங் களிலும் மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார் 'சே'.

           ''சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்'' போன்ற அவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு மில்லியன் மெகா வாட் மின்சாரத்தைப் பாய்ச்சி சீற்றம் கொள்ளவைத்தன. யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில் லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான் 'சே'வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. பின் தொடர்ந்த ஆண்டுகளில் வெவ்வேறு நிலைகளில் புரட்சிப்படை, பாடிஸ்டா அரசை முழுவதுமாக விரட்டியடித்தது.
1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற் றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த் தியது. 'டைம்' இதழ் 'சே' அட்டைப்படத்துடன் 'புரட்சி யின் மூளை'யென கட்டுரை எழுதியது.

           1959, பிப்ரவரி 16&ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன், விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் 'சே'. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் 'சே' என கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் தொழிற்துறை அமைச் சராகவும் 'சே' பதவி வகித்தார். இருந்தாலும் 'சே' தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். 'சே' மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.

           அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதி யாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என 'சே' திடமாக நம்பினார்.

           கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, ''ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்'' எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம். அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத் தது. ''அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப் பேன்'' என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் 'சே'.

           சே குவேராவுக்கு முடிவுரை எழுதக் களத்தில் இறங்கியது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ!

சி.ஐ.ஏ...

           உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார், எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைபடத்தில் இந்த ஓநாயின் காலடி படாத இடமே இல்லை.

           'சே'வின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்புப் பேச்சும் சி.ஐ.ஏ&வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ட்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ. தன் முழு எரிச்சலையும் 'சே'வின் பக்கம் திருப்பியது. காஸ்ட்ரோவைக் காட்டிலும் 'சே'தான் மிகவும் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.

           விழும் இடமெல்லாம் விதைபோல விழுவதும், எழும் இடமெல்லாம் மலை போல எழுவதுமாக இருந்த 'சே', சதித் திட்டம் குறித்து அறிந்தும் புன்னகைத்தார். தொடர்ந்து சீனாவுக்கும் அல்ஜீரியாவுக்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

           ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கப்படும் மூன்றாம் உலகக் குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளா- தாரரீதியாகப் பாதுகாப்-பளிக்க வேண்டி-யது அதன் தார்மிகக் கடமை என முழங்கினார். தொடர்ந்து தான்சானியா, கானா, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது.

           அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதி-காரத்தாலும் ஆப்பிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

           மூன்று மாத & கியூபா அரசால் அங்கீ-கரிக்கப்படாத &பயணத்துக்குப் பிறகு, 'சே' 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு 'சே' நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு 'சே'வைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.

           அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, 'சே'வை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது 'சே'வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் 'சே' கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.

           'சே எங்கே?' பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. 'சே'வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

           சே காஸ்ட்ரோ இருவருக்கு-மிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படை-யில் 'சே' ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கிற செயல் புயல். காஸ்ட்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்பது 'சே'வின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காஸ்ட்ரோவுக்கு. இருவருக்கு மிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை!

           உண்மையில் 'சே' அப்போது காஸ்ட்ரோவுக்கும், அவரது தாய்க்-கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி-விட்டு தனது அடுத்த புரட்சிக்காக காங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ட்ரோ எவ்வளவோ முயற்சித்தும் 'சே'வை நிறுத்த முடியவில்லை. 'மக்களுக்கான பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது' என 'சே' காஸ்ட்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.
'சே எங்கே?' எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ!

           'சே'வை அழித்தொழிக்கத் தேடி வரும் சி.ஐ.ஏ&வுக்கு துப்பு கிடைத்து விடக்கூடும் என காஸ்ட்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு 'சே' சென்று விட்டதாக காஸ்ட்ரோ சொன் னதை நம்பி, வியட்நாம் காடுகளில் 'சே'வை சி.ஐ.ஏ தேடி அலைந்து ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தது. அந்தக் கடுப்பில், 'சே'வை காஸ்ட்ரோ சுட்டுக் கொன்றதற்கு தங்களிடம் ஆதா ரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத் தொடங்கியது. இது காஸ்ட்ரோவுக்கு மிகவும் நெருக்கடியை உருவாக்க, வேறு வழி இல்லாமல் அக்டோபர் 3, 1965&ல், பொதுமக்கள் முன்னிலையில் 'சே' தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் பகிரங்கமாக வெளியிட்டார் காஸ்ட்ரோ. கடிதத்தில் 'சே' கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்தையும், காங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டி ருந்தார்.

           'சே', காங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீரர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் காங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்ததுபோல், அந்த புரட்சி 'சே'வுக்கு வெற்றி தேடித் தரவில்லை. காங்கோ நாட்குறிப்புகள் எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.

           அமெரிக்க சி.ஐ.ஏ. கழுகுகள் அவரைத் தேடி காங்கோ காடுகளுக்குள் புகுந்தபோது, 'சே' தன் பட்டாளத்துடன் செக்கோஸ் லோவியாவுக்கு இடம்பெயர்ந் திருந்தார்.

           'சே'வுக்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லை. பொலிவிய மாவோயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப் பின் பேரில், தன் அடுத்த இலக்கான பொலிவியாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில்  நுழைந்தார். அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப் படையும் புனிதப் பணியில் ஈடுபட்டது. ஆனால், அங்கேயும் அவருக்கு காங்கோவைப் போல தோல்வியே காத்திருந்தது.

           தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து 'சே'வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் 'சே' காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில்வேட்டையாடத் தொடங்கியது.

           1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். காலை 10.30... யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் 'சே' கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

           நண்பகல் 1.30... அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு 'சே'வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.

           பிற்பகல் 3.30... காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ''நான்தான் 'சே'. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார்.

           மாலை 5.30... அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக 'சே'வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் 'சே' கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.

           இரவு 7.00... 'சே பிடிபட்டார்' என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம், 'சே' உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.

           தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ''இது என்ன இடம்?'' என்று 'சே' கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ''பள்ளிக்கூடமா... ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?'' என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் 'சே'வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

           அக்டோபர் 9... அதிகாலை 6.00... லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.

           கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் 'சே'வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது 'சே'தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக் கிறது. 'சே'வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் 'சே'வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் 'சே'வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

           காலை 10.00... 'சே'வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ&விடம் இருந்து தகவல் வருகிறது.

           வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் 'சே'... 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

           காலை 11.00... 'சே'வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. 'மரியோ ஜேமி' என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார்.

           நண்பகல் 1.00... கைகள் கட்டப்பட்ட நிலையில், 'சே'வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ''முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!'' என்பார் 'சே'. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.

           தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு 'சே' கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ''கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!'' இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!

           மணி 1.10... மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

'சே' இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது.

           அக்டோபர் 18.... கியூபா... ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் 'சே'வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. ''வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட 'சே' நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்'' என வேண்டுகோள் விடுக்கிறார்.

           இறந்தபோது 'சே'வுக்கு வயது 40. உலகம் முழுக்க 'சே'வின் புகழ் இன்னும் இன்னும் பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் 'சே' குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்-டோவியா பாஸ், ஹ¨லியா கொத்சார் போன்றவர்கள் 'சே' குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், 'பூமியில் வந்துபோன முழுமையான மாமனிதர் சே!' என மகுடம் சூட்டினார்.

           நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவேராயிசம் எனும் கொள்கைகொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தின்போது ஏசுவைப் போன்ற 'சே'வின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்தி ருந்தனர்.

           கியூபா அரசாங்கம் 'சே'வின் நினைவைத் தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டடங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளா கவும், பல்வேறு உருவ வேலைப்பாடு களாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத் தியது. சான்டா கிளாரா எனும் நகரில் 'சே'வின் மியூஸியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூஸியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவுக்கு வந்து செல்கின்றனர்.

           கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா?

           ''ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர். நாங்கள் 'சே'வைப் போல இருப்போம்!''

ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாறு : இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் எனவும், அகிலம் போற்றும் அதிசய மனிதர் எனவும் புகழப்படுகிற ஜி.டி.நாயுடு மிகப் பெரிய விஞ்ஞானி மட்டுமல்ல...


ஜி.டி. நாயுடு (மார்ச் 23, 1893 - 1974) என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.


வாழ்க்கை வரலாறு 


இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.


எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.


வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.

தனித் திறன்கள்

இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.


சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார்.


அப்போது முதலாம் உலகப் போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.

ஆரம்பத்தோல்விகள்
பின்னர் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து ஊர் திரும்பினார்.



ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.


முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு.

சாதனைகள்

தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு.



முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.


இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக்கழகப் படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.


மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.


எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.


அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.


புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.


நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன.

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான பிளேடுக்கு மூன்றாவது பரிசு

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. "பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்".


அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’


மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.


நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.


எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.


அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.


விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!


அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.


அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.


சமூக சேவைகள்

1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.


தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.


அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். இவர்தான் தமிழகத்தின் தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை என்றால் மிகையாகாது.


இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார்.


நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.


இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.


பாராட்டுகள்
நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றை பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.



‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.


‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அறிஞர் அண்ணா.


'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர். சி. வி. ராமன்.


அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பொருட்காட்சி இன்றும் அவருடைய அறிவுத்திரனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன!

தமிழ்நாட்டை ஆட்டிப் படைக்கும் தெலுங்கர்கள்! நடுவணரசை ஆட்டிப் படைக்கும் மலையாளிகள்!


தமிழர்கள் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல்வாதிகள்


கருணாநிதி முதலமைச்சர் தெலுங்கர்

செயலலிதா எதிர்கட்சித் தலைவர் கன்னடர்

ஆற்காடு வீராச்சாமி அமைச்சர் தெலுங்கர்

கே.என். நேரு அமைச்சர் தெலுங்கர்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அமைச்சர் தெலுங்கர்

எ.வ. வேலு அமைச்சர் தெலுங்கர்

மு.க. ஸ்டாலின் அமைச்சர் தெலுங்கர்

துரைமுருகன் அமைச்சர் தெலுங்கர்

நெப்போலியன் மத்திய அமைச்சர் தெலுங்கர்

தயாநிதி மாறன் அமைச்சர் தெலுங்கர்

மு.க. அழகிரி அமைச்சர் தெலுங்கர்

வை.கோ. ம.தி.மு.க. தெலுங்கர்

விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்

திருமதி விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்

சதீஸ் (விஜயகாந்தின் மச்சான்) தே.மு.தி.க. தெலுங்கர்

வரதராஜன் மாக்சியக் கம்யூ தெலுங்கர்

தங்கபாலு காங்கிரசுக்கட்சி தெலுங்கர்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரசுக் கட்சி கன்னடர்

கி. வீரமணி தி.க. தெலுங்கர்

விடுதலை ராசேந்திரன் பெ.தி.க. தெலுங்கர்

கோவை ராமகிருஷ்ணன் பெ.தி.க. தெலுங்கர்

கவிஞர் தாமரை //// கன்னடர்

கவிஞர் அறிவுமதி //// தெலுங்கர்

பேராசிரியை சரஸ்வதி நாம் தமிழர் கட்சி தெலுங்கர்

திருச்சி வேலுச்சாமி நாம் தமிழர் கட்சி தெலுங்கர்

கிருஷ்ணசாமி புதிய தமிழகம் தெலுங்கர்

வெங்கட்ராமன் தமிழ் தேசியப் பொதுவுடமைக் கட்சி தெலுங்கர்

அதியமான் ஆதித் தமிழர் பேரவை கன்னடர்

கார்முகில் மா.லெ. கட்சி தெலுங்கர்

ஞானதேசிகன் காங்கிரசுக் கட்சி தெலுங்கர்

நடுவணரசை ஆட்டிப் படைக்கும் மலையாளிகள்!


என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,

என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,

ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,

சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,

கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,

சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,

கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,

வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,

சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி

கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்
சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர்

நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்
பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்
செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ரகு மேனன்,

நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ராமச்சந்திரன்,
ஜவுளிச் துறை செயலாளர் ரீட்டா மேனன்,
கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர் கங்காதரன்,

குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர்,
சட்டத்துறை செயலாளர் விசுவநாதன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மாதவன் நாயர்

நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர். அவர்கள்:

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது

வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!

சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது

பூரான் கடிதால் என்ன செய்வது ?


விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.

உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.

பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். உள்ளுக்கு பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.

பூரான் கடியை தீர்க்க மருந்து

குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.

மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெய்யில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.

ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் - கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

ஏசியை எப்படிப் பராமரிப்பது? ஏர் கூலர் எப்படி? என்ன பிராண்ட்? என்ன விலை? (AC & Air Cooler)



ஏசியை சரியாகப் பராமரிக்காவிட்டால் நீண்ட நாள் உழைக்காது. அதோடு, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு  ருக்கிறது. முறையாகப் பராமரிக்காத ஏசி அதிகம் செலவு வைக்கும். எப்படிப் பராமரிப்பது என்பதை விளக்குகிறார் ஏசி மெக்கானிக் இஜாஸ் அகமது. மாதம் ஒருமுறையாவது ஏசியை சர்வீஸ் செய்யவேண்டும். அதிகமான புகை, புழுதி உள்ள இடங்களில் வசிப்பவர்கள் குறைந்தது மாதத்துக்கு 2  முறை சர்வீஸ் செய்யவேண்டும். அதிக தூசி ஏசியில் சேர்ந்தால் பாதிப்பு நமக்குத்தான். எனவே, ஏசியில் உள்ள ஃபில்டரை சுத்தப்படுத்த சர்வீஸ் செய்வது அவசியம். அதிகம் பயன்படுத்தாத காலகட்டத்தில்கூட சர்வீஸ் செய்து வைப்பது ஏசியின் வாழ்நாளைக் கூட்டும்.

ஏசி வாங்கும்போது இலவச ஸ்டெபிலைஸரையும் சேர்த்துக் கொடுப்பார்கள். அது ஒரிஜினல் பிராண்ட்தானா என்பதைப் பார்த்து வாங்கவும். சில கடைகளில் விலை மலிவான சீனத் தயாரிப்புகளைக் கொடுத்துவிடுவார்கள். அலுமினிய ஸ்டெபிலைஸர் ஏசியைப் பாழாக்கிவிடும். நல்ல தரமான ஸ்டெபிலைஸரில் தாமிரம் இருக்கும். அதுதான் நீடித்து உழைக்கும்.

ஏசி இணைப்பில் இருக்கும் ஒயர்கள் அடிக்கடி லூசாகிவிடும். அதனால்தான் தீ விபத்து, ஏசி வெடிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஏசியில் உள்ள ஒயர்கள் சரியாகப் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்பதை மெக்கானிக்கின் உதவியோடு அவ்வப்போது சோதனை செய்வது நல்லது.

குளிர் முகத்தில் படவேண்டும் என்பதற்காக உங்களுக்குப் பிடித்த இடத்தில் ஏசியை வைக்கக்கூடாது. குறைந்தது 6 அடிக்கு உயரமான இடத்தில்தான் ஏசி இருக்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து வெளியாகும் குளிர்ச்சி அறை முழுக்க நிரம்பும்.

நல்ல குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிக டிகிரியில் டெம்பரேச்சர் வைக்கக் கூடாது. 23 டிகிரிக்கு குறைவாகச் செல்லும்போது ஏசியில் 
அதிக பிரஷர் ஏற்படும். அதனால் தீப்பிடிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே 23 - 24 டிகிரி என அளவான டெம்பரேச்சருக்கு பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

ஏசி ஆனில் இருக்கும்போது பெர்ஃப்யூம், ரூம் ஸ்பிரே ஆகியவற்றை ஏசியின் மீது அடிக்கக்கூடாது. அப்படிச் செய்தால், ஏசியின் உள்ளே இயங்கும் காயில் பழுதாகிவிடும்.

ஏசி அறையில் சூரிய ஒளி படாதவாறு ஸ்கிரீன் போட்டுக்கொள்வது நல்லது. வெப்பம் அறைக்குள் நுழைந்தால் அவ்வளவு சீக்கிரம் குளிர்ச்சி அடையாது. இதனால் மின்சாரமும் வீணாகும்.

ஏசியை சரியாக துளையிட்டு பொருத்தாவிட்டால் அதிகம் சப்தம் எழுப்பும். பர்ச்சேஸ் செய்யும் கடையிலேயே பிராண்டுக்கு ஏற்றபடி ஏசி பொருத்திக்கொடுக்க நபர்கள் இருப்பார்கள். அவர்களையே அழைத்து ஏசியை பொருத்துவது நல்லது.

சர்வீஸ் செய்யும்போது காயில் க்ளீன் செய்யப்படுகிறதா? ஃபேன் மோட்டார்களுக்கு ஆயில், பெல்ட் அட்ஜஸ்ட்மெண்ட், கம்ப்ரஸர் க்ளீனிங் எல்லாம் செய்கிறார்களா என்பதை அருகிலிருந்து சோதனை செய்து கொள்ளுங்கள்.

ஏசி பொருத்தப்பட்ட அறையில் அளவுக்கு அதிக பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி இருந்தால், அறை குளிர்ச்சியாவதற்கான நேரம் அதிகமாகும். 
அதன் காரணமாக மின்சாரம் அதிகம் செலவாகும்.

ஏர் கூலர் எப்படி?

அதிக விலை கொடுத்து ஏசி வாங்க முடியாதவர்கள், சுவரில் ஏசி பொருத்தும் வசதி இல்லாதவர்களுக்கு ஏர்கூலர் சரியான சாய்ஸ். ஆனால், ஏர்கூலர் 

கடல் காற்று வீசும் அல்லது அதிக ஈரப்பதம் நிலவும் பிரதேசங்களில் சரிவர பயன் அளிக்காது. சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஏர்கூலரால் பலனில்லை. ஏர்கூலர் குளிர்ந்த காற்றை மட்டுமே தரும். ஏசியில் கிடைக்கும் குளிர்ச்சி ஏர் கூலரில் கிடைக்காது.

ரூ15 லிட்டர், 25 லிட்டர், 45 லிட்டர் என அறையின் தன்மைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். உஷா, கென்ஸ்டார், சிம்பொனி என பல பிராண்டுகள் கிடைக்கின்றன. விலை ரூ. 4 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ரூபாய்க்குள்.

குளிர் முகத்தில் படவேண்டும் என்பதற்காக உங்களுக்குப் பிடித்த இடத்தில் ஏசியை வைக்கக்கூடாது

என்ன பிராண்ட்? என்ன விலை? (ரூபாயில்)
முக்கால் டன்
ஒனிடா    17,990
கோத்ரெஜ்    17,990
80 சதுர அடி கொண்ட அறைக்கு முக்கால் டன் ஏசி போதும். ஆன் செய்த 15 நிமிடங்களில், அறையில் போதுமான குளிர்ச்சி கிடைத்துவிடும்.
ஒரு டன்
வீடியோகான்    17,990
பேனசோனிக்    20,990
கோத்ரெஜ்    20,990
ஒனிடா    20,990
வோல்டாஸ்    22,000
எல்ஜி    22,990
சாம்ஸங்    22,990
ப்ளூஸ்டார்    26,990
ஹிடாச்சி    28,990
100 - 150 சதுர அடி கொண்ட அறைக்கு ஒரு டன் ஏசி போதும். ஆன் செய்த 20 நிமிடங்களில் அறை ‘ஜில்’லாகிவிடும்!
ஒன்றரை டன்
வீடியோகான்    21,490
கோத்ரெஜ்    24,490
ஒனிடா    25,490
வோல்டாஸ்    25,500
எல்ஜி    26,490
சாம்ஸங்    26,490
பேனசோனிக்    26,990
ப்ளூஸ்டார்    30,990
ஹிடாச்சி    32,990
160 - 180 சதுர அடி அறைக்கு இந்த ஏசி போதுமானது.
2 டன்
எல்ஜி    35,490
சாம்ஸங்    34,490
ஹிடாச்சி    39,000
கோத்ரெஜ்    33,900
ஒனிடா    33,900
ப்ளூஸ்டார்    37,500
பேனசோனிக்    33,000
வோல்டாஸ்    32,790
ஓ ஜெனரல்    39,990
200 - 240 சதுர அடி கொண்ட அறைக்கு 2 டன் ஏசி பொருத்தலாம்.