செவ்வாய், 13 அக்டோபர், 2015

குழந்தை அரோக்கிய வளர்ப்பு முறை: முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு)
ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சக
ல சத்துக்களும் நிறைந்து எளிதில் செரிக்கும் தன்மை
கொண்ட தாய்ப்பால் சிறந்ததாக மட்டுமின்றி ஒரு முழுமையான இயற்கை உணவாகவும் அமைகின்றது.
vishnu arasur

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு மற்றும் பானமாகும். வேறு எந்த உணவோ, பானமோ, ஏன் தண்ணீர் கூட இந்த காலகட்டத்தில் சிசுவிற்கு தேவையில்லை.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது தாய்ப்பால் சேர்த்து நன்கு குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவினால், குழந்தையின் வயிற்றில் உள்ள கறுப்பு மலம் வெளியேறிவிடும்.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் அம்மைத் தடுப்பு ஊசி போடுவார்கள். ஊசி குத்திய இடம் புண் ஆகாமல் இருக்க வேப்ப இலையும், பசு
மஞ்சளும் சேர்த்து அரைத்துத் தடவினால் விரைவில் ஆறி விடும்.
குழந்தை பிறந்த ஐந்தாம் நாள் வெற்றிலைச் சாறு, தாயப்பால், கோரோஜனை ஒரு அரிசி எடை அளவு கலந்து புகட்டினால் சளி இருந்தால் வெளியேறிவிடும்.
ஏழாம் நாள் துளசிச்சாறு எடுத்து தாய்ப்பாலில் கலந்து புகட்டினால் சளி கரையும். குழந்தைக்கு தலைக்குக் குளிப்பாட்டும் போது கொடுக்க (11ம் நாள்) சுக்கு, சித்தரத்தை, ஜாதிக் காய், மாசிக்காய் எல்லாவற்றையும் பாலில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெந்த சாமான்களை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும். குழந்தையைத் தலைக்குக் குளிப்பாட்டியவுடன் ஒரு சந்தனக் கல்லில் பாலில் வேக வைத்த இந்தச் சாமான்களை ஒரு முறை இழைத்து தாய்ப்பால் சேர்த்து (ஒரு கட்டிப் பெருங்காயத்தையும் இந்தச் சாமான்களுடன் வைத்துக் கொள்ளவும்.) பெருங்காயத்தையும் ஒரு இழை இழைத்து எல்லாவற்றையும் சேர்த்துப் புகட்டலாம்.
சுக்கு வாயுவைக் கலைக்கும் - சித்தரத்தை சளி பிடிக்காதுஜாதிக்காய் தூக்கம் வரும் மாசிக்காய் பேதி ஆகாது - காயம் வாயுவைக் கலைக்கும்.
குழந்தைக்கு வயிற்று வலி இருந்தால் நாமக் கட்டியை இழைத்து, தொப்புளில் போடலாம்.
வசம்பு வாங்கி வந்து உப்புத் தண்ணீரில் நனைத்து, நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். "குழந்தை வயிற்று வலியால் " அழுதால் சந்தனக் கல்லில் ஒரு இழை இழைத்து தாய்ப்பால் கலந்து ஒரு பாலாடை அளவு புகட்டலாம். சுட்ட வசம்பின் சாம்பலை ஒரு வெற்றிலையில் போட்டு சிறிது தேன் கலந்து, நன்கு குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினாலும் வயிற்று வலி சரியாகும்.
     குழந்தைக்கு வயிறு மந்தமாக இருந்தால், வெற்றிலைச் சாறு, தாய்ப்பால், கஸ்தூரி மாத்திரை மூன்றையும் கலந்து புகட்டுங்கள். வயிறு மந்தம் சரியாகும்.
          வெற்றிலை, ஓமம், பூண்டு, உப்புக்கல் சேர்த்து அரைத்து வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்துப் புகட்டினால் வயிறு மந்தம் சரியாகும்.
தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தைப் போட்டு, காய்ச்சி மாந்தம் வரும்போது, விலாக்களிலும் மார்பிலும் தடவி, கறுப்பு வெற்றிலையை அடுப்பில் சூடு செய்து ஒத்தடம் கொடுத்தால் சரியாகும்.
வெற்றிலைக் காம்பை விளக்கொண்ணெயில் தோய்த்து குழந்தையின் ஆசன வாயினுள் வைத்தால் மலம் இளகி சுலபமாக வெளியேறும்.
கற்பூர வல்லி இலையை, சிறிது நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், சளி கரையும். சிறிது பெரிய ழந்தையென்றால் கற்பூரவல்லி இலையை, காரமில்லாத பஜ்ஜி மாவில் தோய்த்து, பஜ்ஜியாகச் செய்து கொடுக்கலாம்.
கொய்யா இலையை நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து கொடுத்தால், பேதி நின்றுவிடும்.
ஆறு மாதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நொச்சி இலை, நுணா இலை, ஆடாதோடா இலை மூன்றையும் சேர்த்து நீர்விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், சளி கரையும்.
கண்டங்கத்திரி இலையை நீரி சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால் சளி கரையும்.
தூதுவளை இலையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து, தேன் கலந்து வடிகட்டிக் கொடுத்தால், சளி கரையும்.
மொசுமொசுக்கை நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, உப்புக்கல் சேர்த்து வடிகட்டிக் கொடுத்தால், குழந்தைக்குச் சளி பிடிக்காது.
vishnuvardhan arasur
வெண் புழுங்கல் அரிசியை ஊற வைத்து, ஓமம், உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து தேன் குழல் அச்சில் மாவைப் போட்டு, ஒரு துணியில் சிறுசிறு வில்லைகளாகப் பிழிந்து காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வில்லையை எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் 5 நிமிடம் வைத்தால் வெந்து விடும். கீழே இறக்கி வைத்து சிறிது பால், சர்க்கரை சேர்த்து ஊட்டினால் குழந்தை புஷ்டியாகவளரும்.
ஆறு மாதக் குழந்தைக்கு, வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து, வடி கட்டிக் கொடுத்தால், வயிற்றில் பூச்சி வராது.
கேழ்வரகு இரண்டு ஸ்பூன் முதல் நாள் ராத்திரி
வைத்து, மறுநாள் காலை மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் சிறிது தண்ணீர் வைத்து அரைத்த கேழ்வரகு விழுதை ஒரு துணியில் போட்டு வடிகட்டி, அந்தப் பாலைப் போட்டு கைவிடாமல் கிளறி (2 நிமிடம்) இறக்கவும். பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். 6 மாதக் குழந்தையாக இருந்தால், சிறிது ரசம் சேர்த்துக் கொடுக்கலாம். (அரைத்த கேழ்வரகை ஒரு துணியில் போட்டு வடிகட்டி அந்தப் பாலை எடுத்து உபயோகிக்கவும்.)
      குழந்தையைக் குளிப்பாட்டும் வெந்நீரில், சிறிது யூகலிப்டஸ் இலையைப் போட்டு அந்த நீரில் குளிப்பாட்டினால் ஆரோக்கியமாக வளரும்.
குழந்தைக்கு ஆரம்பத்திலேயே தூளி பழக்கப் படுத்தக் கூடாது. பழக்கமானால் பிறகு தூளி இல்லாமல் தூங்காது


சனி, 12 செப்டம்பர், 2015

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு வகைகளின் கலோரி மதிப்பு

50 கலோரிக்கும் குறைவான உணவுகள்
(இவை 100 கிராம் எடைக்குப் பொருந்தும்)
டீ 150 மிலி  – 25 கலோரி
காபி 150 மிலி – 30
(30
மிலி பாலுடன், சர்க்கரை இல்லாமல்)
மோர் – 15
இளநீர் – 24
தண்டுக்கீரை – 45
கீரைத்தண்டு – 19
சிறுகீரை – 33
முளைக்கீரை – 43
அரைக்கீரை – 44
குப்பக்கீரை – 38
முட்டகோஸ் – 27
கொத்தமல்லி – 44
வெந்தயக்கீரை – 49
புதினா – 48
பருப்புகீரை  – 27
பசலைகீரை – 26
வெள்ள பூசணி – 10
பீன்ஸ் – 48
பாகற்க்காய் – 25
சுரைக்காய் – 12
கத்தரிக்காய் – 24
அவரைக்காய் – 48
காலிபிளவர் – 30
வெண்டைக்காய் – 35
மேரக்காய் – 27
கொத்தவரங்காய் – 16
வெள்ளரிக்காய் – 13
முருங்கைக்காய் – 26
பீர்க்கங்காய் – 17
புடலங்காய் – 18
தக்காளிக்காய் – 23
தக்காளிப்பழம் – 20
பீட்ருட் – 43
கேரட் – 48
பெரிய வெங்காயம் – 50
முள்ளங்கி (வெள்ளை) – 17
முள்ளங்கி (சிவப்பு) – 32
குடைமிளகாய் – 24
கோவைக்காய் – 18
நூல்கோல் – 21
வெங்காயத்தாள் – 11
பூசணி (மஞ்சள்) – 25
வாழைத்தண்டு – 42
வாழைப்பூ – 34
மாங்காய் – 44
பச்சை மிளகாய் – 29
கொய்யாப்பழம் – 38
சாத்தூக்குடி – 43
தர்பூசணி – 16
ஆரஞ்சுபழம் – 48
பப்பாளிப்பழம் – 32
அன்னாசிபழம் – 46
பச்சைபயிறு சுண்டல் – 33
பட்டாணி சுண்டல் – 33

50 முதல் 100 கலோரி உள்ள உணவுகள்
பால் 100 மிலி – 100
தயிர் ½ கப் – 60
சாம்பார் – 65
தக்காளி சட்னி – 52
வெங்காய சட்னி – 65
புதினா சட்னி – 64
சிறிய வெங்காயம் – 59
பச்சைப் பட்டாணி – 93
உருளைக்கிழங்கு – 93
சேனைக்கிழங்கு – 79
கொடிக்கிழங்கு – 97
வாழைக்காய் – 64
ஆப்பிள் – 59
திராட்சை – 58
பலாப்பழம் – 88
எழுமிச்சை பழம் – 57
மாம்பழம் – 74
மாதுளை – 65
சப்போட்டா – 98
அகத்திக்கீரை – 93
ராஜகீரை – 67
சக்கரவர்த்திக் கீரை – 57
முருங்கைக்கீரை – 92
மணத்தக்காளிக்கீரை – 68
பொன்னாங்கண்ணிக்கீரை – 73
டபிள் பீன்ஸ் – 85
இஞ்சி – 67
நெல்லிக்காய் – 58
கொண்டைக்கடலை சுண்டல் – 63
ராஜ்மா சுண்டல் – 67
தட்டப்பயிறு சுண்டல் – 75-80
முளைகட்டிய பச்சைப்பயிறு சுண்டல் – 62

100 – 200 கலோரி உள்ள உணவுகள்
இட்லி – 140
தோசை – 200
சப்பாத்தி – 100
உப்புமா – 200
பொங்கல் – 138
ஆப்பம் – 100
இடியாப்பம் – 100
அரிசி சாதம் – 113
கோதுமை சாதம் – 114
சாம்பார் சாதம் – 136
தக்காளி சாதம் – 154
புளி சாதம் – 125
தயிர் சாதம் – 160
எலுமிச்சை சாதம் – 124
மீன் குழம்பு – 141
வேகவைத்த முட்டை – 170
ஆம்லெட் – 190
வாழைப்பழம் – 116
சீதாபழம் – 104
மரவள்ளிக்கிழங்கு – 157
ஓவல் – 125
போன்விட்டா – 125
கிச்சடி – 168
கருணைக்கிழங்கு – 111
சக்கரைவள்ளிக்கிழங்கு – 120
பூண்டு – 145
கருவேப்பில்லை – 108

201 – 400 கலோரி உள்ள உணவுகள்
மசால்தோசை – 220
ஊத்தாப்பம் – 220
தேங்காய் சட்னி – 325
பூரி – 318
பூரி மசால் – 209
பரோட்டா – 310
வெஜிடபிள் பிரியாணி – 382
நூடுல்ஸ் – 375
பிரைடு ரைஸ் – 374
கோழிக்கறி – 205
வறுத்த மீன் – 256
ஆட்டு இறைச்சி – 374
பன்றி இறைச்சி – 375
பேரிச்சம்பழம் – 317
ஐஸ்கிரீம் – 217
பர்பி – 296
சமோசா – 256
வடை – 243
போண்டா – 223
பஃப்ஸ் – 356
லட்டு, மைசூர்பா – 387
குலாப் ஜாமூன் – 400
ரசகுல்லா – 340
கோதுமை பிரட் – 244
சாதா பிரட் – 245
சர்க்கரை – 398
தேன் – 319
வெல்லம் – 383
ஜவ்வரிசி – 351
கடலைப்பருப்பு – 372
பொட்டுக்கடலை – 369
கொள்ளு – 321
சுண்டைக்காய் உலர்ந்தது – 269
ஏலக்காய் – 229
வரமிளகாய் – 246
கிராம்பு – 286
மல்லி – 288
சீரகம் – 356
வெந்தயம் – 333
மிளகு – 304
மஞ்சள் தூள் – 349
புளி – 283
பன்னீர் – 265

400 கலோரிக்கு மேல் உள்ள உணவுகள்
தேங்காய் பால் – 430
ஓட்டு பக்கோடா – 474
முறுக்கு – 529
தட்டவடை – 521
உருளைக்கிழங்கு சிப்ஸ் – 569
மிக்சர் – 500
கேக் – 460
பாதாம் – 655
முந்தரி – 596
வெண்ணைய் – 729
நெய் – 900
டால்டா – 900
சமையல் எண்ணெய் – 900
இறைச்சிஉறுப்பு பகுதிகள் – 406
மாட்டிறைச்சி – 413
பாதாம் அல்வா – 570
ஜிலேபி – 412
சாக்லேட் – 499
எள்ளு – 563
நிலக்கடலை – 570
பிஸ்தா – 626
கசகசா – 408
சோயா பீன்ஸ் – 432
கச்சோரி – 500
பீட்ஸா – 580
பர்கர் – 540
காய்ந்த தேங்காய் -662
தேங்காய் – 444
குறிப்பு : இந்தப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள கலோரி அளவுகளள் தோராயமானதே. சமைக்கும் விதத்தைப் பொருத்தும், மூலப்பொருட்களைப் பொருத்தும் கலோரி அளவுகள் மாறுபடலாம்.