செவ்வாய், 3 டிசம்பர், 2013

பயணம் செய்யும் போது சாப்பிட வேண்டிய உணவு முறைகள்

வெளியே நண்பர்களுடன் பிக்னிக் போனாலோ அல்லது எங்கேனும் ஊருக்கோ அல்லது வெளியே சென்றாலோ, அப்போது உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது என்பது அவசியம். அப்போது தான் நம் கண்களுக்கு விதவிதமான சுவையான உணவுகள் எல்லாம் கண்களில் படும். அதைப் பார்க்கும் போது பசியும் அதிகம் உண்டாகும். ஆகவே பயணத்தின் போது உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்ற, கண்ணில் படும் உணவுகளையெல்லாம் உண்ணாமல் இருக்க சில டிப்ஸ் இருக்கிறது.

1. பயணம் செய்யும் போது தானியங்களான வேக வைத்த சுண்டல், பட்டாணி போன்றவற்றை எடுத்து செல்லலாம். எப்போது தெருவில் விற்கும் தின்பண்டங்களை பார்க்கும் போது பசிக்கிறதோ, அப்போது அந்த தானியங்களை சாப்பிடலாம்.

2. பஸ்ஸில் செல்லும் போது கடையில் விற்கும் பொருட்களை தான் சாப்பிட வேண்டுமென்றால், அப்போது கண்டதை சாப்பிடாமல் நிலக்கடலை, மக்காச்சோளம் அல்லது வெள்ளரிக்காய் போன்றவற்றை வாங்கி சாப்பிடலாம். இதுவும் ஒரு சிறந்த டையட் மேற்கொள்வோருக்கான உணவாகும். இதை சாப்பிட்டால் பசியும் குறையும்.

3. சாப்பாடு வேண்டுமென்றால் வீட்டில் இருந்தே தயாரித்து கொண்டு வரலாம். 
அதுவும் நறுக்கிய காய்கறிகளோடுராகியை உருண்டை அல்லது ரொட்டியை கொண்டு செல்லலாம்அதுவும் ராகி உருண்டையானது காய்கறியை வேக வைத்த தண்ணீரை ஊற்றி செய்தால் மிகவும் நல்லது. பயணவழி ஓட்டல்களில் செய்யும் உணவுகளில் அதிகம் கலப்படம் இருக்கும்..  மேலம் அப்போது அரிசி உணவை உண்ண வேண்டாம்.

4. விமானத்தில் செல்வதாக இருந்தால், அப்போது சாலட், பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அப்போது எண்ணெயில் பொரித்த உணவுகள் எதையும் உண்ண வேண்டாம்.

5. முடிந்த வரை ஓட்டல்களின்  ஃபுல் மீல்ஸ் கரி வகைகள் கண்ட உணவுகள்  சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பசித்தால் பழ சாரு, பிஸ்கட்ஸ், பயறு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட்டால் சீக்கிரம் செரிமானம் ஆகும். வயறு முழுவதும் சாப்பிடுவதை தவிர்த்து அரை வயிறு சாப்பிடுவது நல்லது.  

6.பயணங்களில் உடல் அதிகம் வெப்பம் அடைகிறது எனவே சாப்பிடும் பொது குளிர்சியான உணவுகளான இளநி, வெள்ளரிகாய், தர்பூசணி, எலுமிச்சை மற்றும் பழசாறு சேர்த்து சாப்பிட வேண்டும்.  

6. பயணங்களில் வெளியூர் செல்பவர்களுக்கு கழிவறை வசதிதான் சிரமமாக முடிந்த வரை மேலே உள்ள உணவு வகைகளை பின்பற்றினால் பயணம் சிறப்பாக அமையும்.