புதன், 25 டிசம்பர், 2013

தியானம் செய்யும் முறையும் பயன்களும்:

தியானம் செய்யும் முறை:

தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.

எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.

நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம்.

தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம்.

வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.

கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள்.

இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள்.

கண்களை மேதுவாக மூடுங்கள்.

அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள்.

உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.

மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.

கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.

கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.

மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது.

ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.

நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.

மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு.
மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.

மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.

நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.

மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.

கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.

இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.

மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.

காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது.

மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.

நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.

இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.

எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள்.

கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.

எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.

இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.

அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.

இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.

இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.

எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.

இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.

இதுதான் தியான நிலை.

இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.

தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.

**********************************************************************
 "தியானத்தின் பலன்கள்

1) வியாதிகளிலிருந்து நிவாரணம்

2) வியாதி வராமல் தடுக்கும் சக்தி பெருகி, நிரந்தர ஆரோக்கியம் பெறுதல்.

3) தேவையற்ற பழக்க வழக்கங்கள் மடிந்து மறைதல்

4) மனம் எப்பொழுதும், அமைதியான, ஆனந்த நிலையில் இருத்தல்
5)
மற்றவருடன் தோழமை, நட்பு வளர்ந்து, செம்மைப்படுதல்.
6)
எண்ணிய எண்ணம் வலுப்பெற்று, நிறைவேறுதல்.
7)
ஞாபக சக்தி அதிகரிப்பு.
இந்த வாழ்க்கையின் இலட்சியத்தை குறிக்கோளை - தெள்ளத் தெளிவாக அறிதல்.
9)
வேலைத்திறன் கூடுதல், மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்தல்.
10)
மேலுலக குருமார்களுடன், தியானத்தில் தொடர்பு கொண்டு, அவர்கள் அறிவுரைப்படி தீராத பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.
11)
சூட்சும சரீர யாத்திரை, வருமுன் கண்டறிதல் இன்னும் பற்பல தியான அனுபவங்கள் ஏற்பட்டு தன்னையறிந்து, முக்தி பெறுதல்.
12)
முன் ஜன்மங்களை தியானத்தில் கண்டறிதல்.
13)
எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் (awareness) செயல்படல்.

மாணவ, மாணவியருக்கு:
1)
உடல் ஆரோக்கியம் அடையும்.
2)
தேவையற்ற பழக்கங்கள் மடிந்து மறையும்.
3)
பாடத்தில், கூடுதல் கவனம் ஏற்படும்.
4)
ஞாபக சக்தி வளரும்.
5)
எல்லோருடனும் சுமூக உறவு ஏற்பட்டு செம்மை பெறும்.
6)
உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் கலைத்திறமை, மற்றும் பற்பல திறமைகளை கண்டறிந்து, வளரச் செய்ய இயலும்.
7)
பயம், போன்ற தேவையற்ற உணர்ச்சிகள் நம்மைவிட்டு அகலும். தன்மைபிக்கை பன்மடங்காகும்.
உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாமல் மனம், குதூகலம், அமைதி, திருப்தி அடையும்.
9)
மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும்.
10)
நஷ்டங்களை மற்றும் தோல்விகளைக் கண்டு தளராத மனவலிமை ஏற்படும்.
11)
அளவான தூக்கம் மற்றும் பேச்சு உண்டாகும். தேவைக்கதிகமான தூக்கத்திலும், பேச்சிலும், நேரம் வீண் போகாது.
12)
சூட்சுமமானவற்றையும் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு வளரும்.
13)
தேர்ந்தெடுக்கும் திறன் (Power of choice) எண்ணத்தின் வலிமை (thought power) இவை உண்டாகும்.

கர்ப்பினிப் பெண்களுக்கு - தியானம் மிக மிக அவசியம்
1)
தாய், சேய் நலம் உண்டாகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராகும்.
2)
மன வலிமை, மன அமைதி ஏற்படும்.
3)
பயம் அகன்று, தைரியம் உண்டாகும்.
4)
சுகப் பிரசவம் உண்டாகும். பழைய ஆரோக்கிய நிலைக்கு உடனடியாகத் திரும்பலாம்.
5)
குழந்தைக்கு ஆன்மீக நெறியான அடிப்படை பாடம், பிறக்கும் முன்பே உருவாகி, வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும்.